வரிச்சலுகை என்ற பெயரில் வரி ஏய்ப்பு- வருமான வரித் துறை வார்னிங் ! – AanthaiReporter.Com

வரிச்சலுகை என்ற பெயரில் வரி ஏய்ப்பு- வருமான வரித் துறை வார்னிங் !

வேறு வழியில்லாமல் சப்மிட் செய்த வருமான வரி படிவங்களில் தப்பான தகவல்களை தர உதவும், வரி ஆலோசகர்கள் மற்றும் ஆடிட்ட மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாத சம்பளம் வாங்குவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவறான தகவல்களை தந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

தகவல் தொழில் நுட்ப நகராமான  பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுனவங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தவறான முறையில் வரி ஆலோசகர்களின் உதவியுடன் எந்த சொத்தும் இல்லாத போதும், சொத்துகளுக் கான சலுகைகளைக் கோரியது தெரிய வந்தது.

இதேபோல், பணம் கொடுக்காமலேயே நன்கொடை கொடுத்ததாக கணக்குக் காட்டி வரிச்சலுகை கோரியதாகவும் கூறப்பட்டது. அது போல், லூதியானா, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் சில ஊழியர்கள் தவறான முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வரிச் சலுகை பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெங்களூரில் உள்ள வருமான வரித்துறை மத்திய செயலாக்க மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

‘‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத சம்பளம் வாங்குவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது வரிச் சலுகை பெறுவதற்காக சட்டவிரோதமான வழிமுறைகளை பின்பற்றுவதாக தகவல் வந்துள்ளது.

வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வரிச் சலுகை கோரி தவறான சான்றுகள், ரசீதுகள் போன்றவற்றை சமர்பிக்க வேண்டாம்.

இல்லாத சொத்துக்களை கணக்கு காட்டி வரி விலக்கு கோர வேண்டாம். இவை அனைத்துமே வரி ஏய்ப்பாகவே கருதப்படும்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் தவறான வழிகளில் வரிச்சலுகை பெற்றிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக வருமான வரித்துறையின் கண்காணிப்பு பிரிவு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையில் புகார் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.