உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி – டாப் பட்டியலில் திருப்பூர், சென்னை, திருச்சி! – AanthaiReporter.Com

உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி – டாப் பட்டியலில் திருப்பூர், சென்னை, திருச்சி!

உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் சென்னை உள்பட 3 தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் மிக உயர்ந்த கல்வி சாலையான ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பொருளாதார ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உலக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப் ட்டுள்ளது. இதில் எதிர்கால ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) அடிப்படையில் 2019 முதல் 2035 வரை உலகின் சில நகரங்களில் வளர்ச்சி மிக வேகமாக நடக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதில் அடுத்த 20 ஆண்டுகளில் அதி வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையவிருக்கிற நகரங் களின் பட்டியலில் இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் வேகமாக வளர்ந்து வரும் உலகின் 20 நகரங்களின் பட்டியலில் 17 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி 2019 – 2023 ம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதல் இடத்திலும், ஆக்ரா 2வது இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் பெங்களூரு, 4வது இடத்தில் ஐதராபாத், 5வது இடத்தில் நாக்பூர், 6வது இடத்தில் திருப்பூர், 7 வது இடத்தில் ராஜ்கோட், 8 வது இடத்தில் திருச்சி, 9 வது இடத்தில் சென்னை, 10 வது இடத்தில் விஜயவாடா உள்ளது.
உலக அளவில் ஆப்ரிக்காவின் தர் இஸ் சலாம் நகரம் உள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வரும் டாப் 10 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பிடித்துள்ளது.