தோப்புக்கரணம் போட்டால் டிக்கெட் இலவசம்..! – இந்தியன் ரயில்வே அதிரடி! – வீடியோ

நம்மில் சைவ சமயத்தவர்கள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக் கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை.

தோப்புக்கரணம் என்பது தண்டனை ஆயிற்றே, அது எப்படி பயிற்சி ஆகும்?

தோப்புக்கரணம் பற்றி புராணம் சொல்வதையும்,அதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மை களையும் பற்றியும் தெரிந்து கொள்வோமா?.

கஜமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான்.அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்களை அடிமைப்படுத்தி, அவர்களுக்கு, பலவிதமான கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான்.

தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

விநாயகரையும் தோப்புக்கரணம் போடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். மிகுந்த கோபம் அடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார்.கஜமுகாசுரனை அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவர்கள் விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செய்தனர். அன்று முதலே விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.

வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது. இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆக.. இந்த தோப்புக்கரணம் என்பது இந்தியாவின் சொத்து. ஆனால், அந்த சொத்தை மற்ற நாடுகள் தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். இதற்கு சூப்பர் பிரைன் யோகா என்றும் அவர்கள் பெயர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தினமும் காலை இந்த தோப்புக்கரணத்தை போடும்போது, உடலின் ரத்த ஓட்டம் சீராகும், மூளை அதி விரைவாக செயல்படும். இதுமட்டுமின்றி பல்வேறு பயன்கள் இந்த தோப்புக்கரணத்தை போடும்போது மனித உடலுக்கு கிடைக்கின்றன.

இதுகுறித்து இன்றைய இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஏற்பாடு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதுதொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

நம்மில் சைவ சமயத்தவர்கள் விநாயகர் முன் இரண்டு கைகளால் காதுகளைத் தொட்டு தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை.

தோப்புக்கரணம் என்பது தண்டனை ஆயிற்றே, அது எப்படி பயிற்சி ஆகும்?

தோப்புக்கரணம் பற்றி புராணம் சொல்வதையும்,அதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றியும் தெரிந்து கொள்வோமா?.

கஜமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான்.அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்களை அடிமைப்படுத்தி, அவர்களுக்கு, பலவிதமான கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான்.

தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

விநாயகரையும் தோப்புக்கரணம் போடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். மிகுந்த கோபம் அடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார்.கஜமுகாசுரனை அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவர்கள் விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செய்தனர். அன்று முதலே விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.

வகுப்பில் படிப்பில் கவனக்குறைவுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும் அறிவு வளர்ச்சிதான் என்பதும் தெரிகிறது. இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆக.. இந்த தோப்புக்கரணம் என்பது இந்தியாவின் சொத்து. ஆனால், அந்த சொத்தை மற்ற நாடுகள் தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். இதற்கு சூப்பர் பிரைன் யோகா என்றும் அவர்கள் பெயர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தினமும் காலை இந்த தோப்புக்கரணத்தை போடும்போது, உடலின் ரத்த ஓட்டம் சீராகும், மூளை அதி விரைவாக செயல்படும். இதுமட்டுமின்றி பல்வேறு பயன்கள் இந்த தோப்புக்கரணத்தை போடும்போது மனித உடலுக்கு கிடைக்கின்றன.

இதுகுறித்து இன்றைய இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், சில நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை இலவசமாக அளிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ஏற்பாடு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதுதொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அது சரி தோப்புக்கரணத்தை முறையாகப் போடுவது எப்படி? என்கிறீர்களா?

முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காது மடலையும்,வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.

கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.

வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

தலையை நேராக வைத்து,மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.

பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.

இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

தினமும் 5 நிமிடங்கள் தொடர்ந்து செய்தாலே,நாம் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை.

Related Posts

error: Content is protected !!