போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை!

போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை!

சர்வதேச அளவில் இந்த நொடி கூட எதோ ஒரு மூலையில் ஒரு போலீஸால் யாரோ ஒரு நபர் சித்ரவதை செய்து கொண்டிருக்க படுகிறார் என்பதுதான் உண்மை. அந்த வகையில் இனி போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படும். உடலில் காயத்துக்கு ஏற்ப நஷ்டஈடும் தரவேண்டும் என்று புதிய சட்டங்கள் கொண்டு வரும்படி மத்தியஅரசுக்கு சட்டக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் கூட போலீசார் நினைத்தால் யாரையும் அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்வதும், பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதும் தொடர் சம்பவங்கள் ஆகி வருகின்றன. இதனால் அப்பாவிகள் சிலர் உயிரிழக்கவும், பலர் வெளியே வர முடியாமல் சிறையிலேயே வாடுகிற நிலையும் ஏற்படுகிறது. போலீசாரின் சித்ரவதைகளைத் தாங்க முடியாமலேயே பலரும் தங்களுக்கு தொடர்பில்லாத குற்றங்களை ஒப்புக்கொள்கிறார்கள். இது போன்ற கொடுமைகள் பற்றி ஐ.நா. மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. எனவே போலீசாரின் சித்ரவதைகளில் இருந்து அப்பாவிகளை காப்பாற்றவும், அத்துமீறுகிற போலீசாரை தண்டிக்கவும் ஐ.நா. மாநாட்டு முடிவின்படி புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டும் என்று மத்தியஅரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

அதாவது விசாரணை என்ற பெயரில் மனிதாபிமானமாற்ற முறையில் நடந்து கொள்ளும், சித்ரவதை செய்யும் போலீசாருக்கு பாடம்புகட்டும் வகையில் அவர்களுக்கும் தண்டனை அளிக்க சட்டக்கமிஷன் வரைவு மசோதா ஒன்றை தயாரித்து மத்தியஅரசுக்கு அனுப்பி உள்ளது. இதற்காக . குற்றவியால் நடைமுறை சட்டம் 1973, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை திருத்தப்படவேண்டும். அதன்படி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சித்ரவதை செய்தது, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும். அபராதமும் விதிக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் இழப்பீடும் அளிக்க வேண்டும்.

மேலும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் உடலில் சித்ரவதையினால் காயங்கள் ஏற்பட்ட போதிலும், அவை முன்பே இருந்த காயங்கள் என்றே தங்களின் சித்ரவதையை மறைக்க போலீசார் கூறுவது உண்டு. இனி அப்படி எல்லாம்பொய் சொல்ல முடியாது. பழைய காயம் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியது காவல் அதிகாரிகளின் பொறுப்பு ஆகும். இது போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை செலவுக்காக நியாயமாக எவ்வளவு இழப்பீடு தரவேண்டும்.. போலீசாரின் சித்ரவதையினால் அந்த நபருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் ஒரு நியாயமான தொகையை கோர்ட் முடிவு செய்யும்.

சமுதாயத்தில் நற்பெயருடன் இருப்பவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று சில அதிகாரிகள் அசிங்கப்படுத்துவதும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் பின்னணியையும் கோர்ட் கவனத்தில் கொண்டே தவறு இழைத்து காவல் அதிகாரிகளுக்கு தண்டனை தரவேண்டும். கோர்ட் நிர்ணயிக்கிற இழப்பீடு தொகையானது, அவர்களின் சிகிச்சை செலவுக்கு மட்டுமன்றி அவர்களின் மறுவாழ்வுக்கும் ஏற்ற வகையில் இழப்பீடு தொகை இருக்கவேண்டும். இது போன்ற சித்ரவதைகளில் ஈடுபடும் அதிகாரிகள், தங்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்களை மிரட்டவும் கூடும். எனவே பாதிக்கப்பட்ட நபர்கள், புகார் செய்பவர்கள், சாட்சிகள் என அனைவருக்கும் உரிய பாதுகாப்பு தரவேண்டியதும் அரசின் கடமை ஆகும்.

குடிமக்களின் மீதுஏற்படுகிற ஒவ்வொரு காயத்துக்கும் அரசுகளே பொறுப்பு ஏற்கவேண்டும். அரசின் ஏஜன்டுகள் அல்ல… குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதையே கோர்ட்டுகள் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவுமசோதாவை அரசு ஏற்று சட்டமாக நிறைவேற்றப்பட்டால், காவல்நிலையங்களில் தான் வைத்ததே சட்டம் என்று ஆடுகிற ஒருசில காக்கிச் சட்டை அதிகாரிகளின் அராஜகத்துக்க முற்றுப்புள்ளி வைக்கப்படும். விசாரணைக்கு அழைத்து வரப்படுகிற ஒவ்வொரு காயத்துக்கும் அவர் கோர்ட்டில் கூண்டில் ஏறி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!