அண்ணா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் தற்போது என்றெல்லாம் பேச காரணம்? – AanthaiReporter.Com

அண்ணா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் தற்போது என்றெல்லாம் பேச காரணம்?

அண்ணா தன் அரசியல் வாழ்வையே செங்குந்தர் இளைஞர் மாநாட்டில்தான் தொடங்கினார்.அங்குதான் பெரியாரை கண்டு இணைந்து செயல்பட ஆரம்பிக்கிறார்.பகுத்தறிவு/திராவிடம் என்று பயணம் செய்தார் ஒரு கட்டத்தில் தன் கருத்தியலுக்கு ஒத்துவராத பெரியாரை உதறி திமுக என்கிற இயக்கத்தை உருவாக்கி நடைபோடுகிறார்.பெரியார் போன்ற சர்வாதிகாரியிடம் இருந்து விலகியதை உணர்த்தும் வண்ணம் பல தலைமைகளுக்கு தனக்கு நிகரான கூட்டுத்தலைமை பொறுப்பை தந்தார்.உழைப்பாளர் கட்சிக்கு ஆதரவு தருவதன் மூலம் தன் தேர்தல் அரசியலை துவங்கினார் அதன் பின் 1967ல் நேரடியாக போட்டியிட்டது திமுக முதன்முறை சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

பலமான எதிரி காமராஜர் அவரை வீழ்த்துவது எளிதல்ல ஆனால் அவரை வீழ்த்தக்கூடிய ஒரே ஆள் நான் அல்லது என் தலைமையிலான கட்சி என்கிற நிலையை நோக்கியே அரசியல் செய்தார்.அதனாலேயே இடதுசாரிகளால் காமராஜரின் ஏஜேன்ட் என்று வசைபாடப்பட்டார்.1962ல் திமுக 40க்கு மேல் வெல்லும் போது அதன் பொது செயளாளர் அண்ணா தன் சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுகிறார்.ஆனாலும் தன் தலைமையை நுணுக்கமாக கையாள்கிறார்.அதன் பிறகுதான் காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என எம்ஜிஆர் அரசியல் செய்கிறார்.1967ல் பாராளுமன்றத்திற்கு அண்ணா நிற்க காரணம் ஓரளவு யூகிக்கக்கூடியதே, கட்சிக்கு உள்ளும் புறமும் சூழல் சரியில்லை தான் வீழ்ந்தால் ஓரங்கட்டப்படுவோம் அரசியலில் என்று தெரிந்தேதான் அப்படி செய்திருக்க முடியும்.

திமுகவின் வெற்றி இந்திய அளவில் மிக முக்கியமான வெற்றி.நேருவுக்கு பிறகு காங்கிரஸ் சரிய ஆரம்பிக்கும் எதார்த்தம்.அண்ணாவின் மரணம் எதிர்பாராத அசம்பாவிதம்தான்.கருணாநிதி தலைமை பதவிக்கு வந்தது அண்ணாவையும் அண்ணாவின் விசுவாசிகளையும் புறக்கணிக்கும் விதமாகவே இருந்ததாக அடுத்தடுத்து நடந்த வரலாற்றை யாவரும் அறிந்ததே.இன்று வரை செங்குந்த முதலியார்கள் பெருவாரியாக அதிமுகவிற்கு வாக்களிக்க காரணம் என்னவென்றோ அல்லது அண்ணா இருந்திருந்தால் பாஜகவை ஆதரித்திருப்பார் தற்போது என்றெல்லாம் பேச காரணம் எதுவென்பதையோ பற்றி சொல்லித்தான் புரியவேண்டுமா?பிராமணர் அல்லாத எழுச்சியின் அரசியல் பயனை முதலியார்/பிள்ளை அனுபவிக்க நினைத்தார்கள்.அண்ணாவுக்கு இறந்தவுடன் அதை யாராலும் தாங்கி பிடிக்க முடியவில்லை.நெடுஞ்சழியன் நம்பர் 2 ஆனார்.கடைசி நம்பர் 2 அன்பழகன் தேர்தல் அரசியலில் இருந்து முற்று முழுதாக தோற்கடிப்பட்டுவிட்டார்.

அண்ணா எந்த செங்குந்தர் மாநாட்டில் எழுந்தாரோ? அங்கே வாழ்கிறார்.

ரவீந்தரன் துரைசாமி