ஐ.டி.பி.ஐ., வங்கியில் வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com

ஐ.டி.பி.ஐ., வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியாவின் வளர்ச்சி வங்கிகளில் ஒன்றான இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா வின் சார்பாக ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கியாக நிறுவப்பட்டதுதான் ஐ.டி.பி.ஐ., வங்கியாகும். மூன்றாம் தலைமுறை வங்கிச் சேவைகளை வழங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் கிரேடு ஏ பிரிவில் காலியாக இருக்கும் 600 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.6.1991க்கு பின்னரும், 1.6.1998க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700/-ஐ மேற்கண்ட ஐ.டி.பி.ஐ., வங்கியின் துணை மேலாளர் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள்: 2019 ஜூலை 3. தேர்வு நாள்: 2019 ஜூலை 21.

விபரங்களுக்குஆந்தை ரிப்போர்ட்டர் வேலைவாய்ப்பு