சென்னையிலுள்ள ஐ.சி.எப்.,பில் அப்ரண்டீஸ் ஆஃபர்! – AanthaiReporter.Com

சென்னையிலுள்ள ஐ.சி.எப்.,பில் அப்ரண்டீஸ் ஆஃபர்!

தென்பிராந்திய ரயில்வேயின் ஒரு அங்கமாக சென்னையிலுள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி எனப்படும் ஐ.சி.எப்., அமைப்பு அமைந்து உள்ளது. இங்கு ரயில் பெட்டிகள் கட்டப்படுகின்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: கார்பென்டரில் 36, எலக்ட்ரீசியனில் 66, பிட்டரில் 100, மெஷினிஸ்டில் 32, பெயின்டரில் 30, வெல்டரில் 162, எம்.எல்.டி., ரேடியாலஜி மற்றும் பேதாலஜியில் தலா 4ம் காலியிடங்கள் உள்ளன.

பயிற்சி காலம்: அப்ரெண்டிஸ் பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள். இதில் முதலாம் ஆண்டில் மாதம் ரூ.5700ம், இரண்டாம் ஆண்டில் ரூ.6500ம், மூன்றாம் ஆண்டில் ரூ.7350ம் ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி: என்.டி.சி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடிங் பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே போல, பிளஸ் 2, படிப்பை அறிவியல் புலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை
: மெரிட் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.

கடைசி நாள்: 2018 ஆக., 8.

விபரங்களுக்கு :  ஆந்தை வேலைவாய்ப்பு