கிரிக்கெட்: பூவா – தலையா என்று டாஸ் போடும் வழக்கத்துக்கு குட்பை? – AanthaiReporter.Com

கிரிக்கெட்: பூவா – தலையா என்று டாஸ் போடும் வழக்கத்துக்கு குட்பை?

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பூவா – தலையா என்று ‘டாஸ்’ போடப்படும் வழக்கத்தை கைவிட ஐ.சி.சி., பரிசீலனை செய்து வருகிறது.

இன்றைய விளையாட்டு போட்டிகளில் சர்வதேச மார்க்கெட் உள கிரிக்கெட் போட்டிகள் முதன்முதலில் தொடங்கப்பட்ட போதே, டாஸ் போடும் முறை இருந்து வருகிறது. அதாவது முதல் டெஸ்ட் போட்டி,1877ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியிலேயே டாஸ் போடப்பட்டது. உள்நாட்டு அணியின் கேப்டன் டாஸ் போடுவார்.

வெளிநாட்டில் வந்திருக்கும் கேப்டன் பூவா, தலையா என்று கேட்பார் அப்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்பிரதாயம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.இந்நிலையில் டெஸ்ட் போட்டி நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமாகவே பிட்ச் -ஐ தயார் செய்து விளையாடுவார்கள். இதனால் எதிரணிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதுபற்றி யாரும் வாய்திறக்காமல் இருந்தாலும் சமீபகாலமாக இப்படி ஒரு தலைப்பட்சமாக பிட்ஸை அமைத்து கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இதனையடுத்து டாஸ் போடும் முறையை டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டு நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து விளையாட வந்திருக்கும் அணியின் கேப்டன் பந்துவீசுவதா ? பேட்டிங் செய்வதா ? என்பதை முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இது குறித்து வரும் 28, 29ம் தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ள ஐ.சி.சி., கமிட்டியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், 2019-21 வரை நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இம்முறை அமல்படுத்தப்படும். தவிர, இங்கிலாந்து மண்ணில் நடக்கவுள்ள ஆஷஸ் தொடரிலும் பின்பற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.