நான் முதல் அமைச்சரானால் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்! – ரஜினிகாந்த் பிராமிஸ்!

நான் முதல் அமைச்சரானால் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்! – ரஜினிகாந்த் பிராமிஸ்!

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மாவட்டம்தோறும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றிய, நகர நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்கிறார். ரசிகர்கள் ரஜினிகாந்த் உடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ரசிகர்களுக்கு சிறப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

rajni may 15

இதனையடுத்து, தலா ஒரு மாவட்டத்திற்கு 200 ரசிகர்கள் வீதம், கரூர், திண்டுக்கல், குமரி மாவட்டங்களைச்சேர்ந்த 600 ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், ஏராளமான ரஜினி ரசிகர்கள் அவருடன் செல்பி எடுப்பதற்காக, ராகவேந்திரா மண்டபத்தில் குவியத்தொடங்கியுள்ளனர். அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே ரஜினியுடன் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மாலை 4 மணி வரை இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசிய போது,”என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி என பேச்சை துவக்கிய ரஜினி. பேச்சை துவக்குவதற்கு முன்னதாக முத்துராமனை பற்றி கூறிகொள்கிறேன். ஒழுக்கத்தை நான் எஸ்.பி.முத்துராமனிடம் கற்றுக்கொண்டேன், என்னை எப்பொழுது அவர் சந்தித்தாலும் சொல்வது 2 விஷயம் தான். ஒன்று என் உடம்பை பார்த்து கொள்ள சொல்லுவார். அடுத்து உன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள் என்பார். அவர் சொன்னது போல் அந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

அந்த காலத்தில் ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் இருந்தது குடிப்பழக்கம் எனக்கு இருந்தது. இரவுகளில் வேலை செய்து விட்டு நிறைய துங்கிவிடுவேன். காலை ஷீட்டிங் போக லேட் ஆகிவிடும். முதல் நாள் லேட்டாக போனேன், இரண்டாவது நாளும் லேட்டாக போனேன். 3வது நாள் எஸ்.பி என்னிடம் தனியாக பேச வேண்டும் என்றார். அப்பொழுது ரஜினி நீ இப்பொழுது படத்தின் ஹீரோ நீ முதலில் வந்தால் தான் எல்லோரும் ஒழுங்காக வருவார்கள், ஹீரோவே லேட்டாக வந்தால் எல்லோரும் லேட்டாக வருவார்கள் அதனால் நீ முதலில் வந்து விடு என்றார். அன்றையிலிருந்து நான் தான் ஷீட்டிங்குக்கு முதலில் செல்கிறேன். அப்படி எனக்கு வழிக்காட்டியாக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன்

மேலும் அவர், “கடந்த சில வருடங்களா சில காரணங்களால் வெற்றி விழாக்களைக் கொண்டாட முடியவில்லை. குறிப்பா சில வேலை காரணமாக ரசிகர்களைச் சந்திக்க முடியவில்லை. இலங்கைப் பயணமும் திடீரென்று ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, ஊடகங்கள் ரஜினி முடிவில் உறுதியாக இருக்க மாட்டார் என்று செய்திகள் வந்தன. தண்ணீரில் இறங்கும்போது, முதலைகள் இருக்கின்றன. அப்போது, கால் வைத்தால் என்ன ஆகும்? அதனால், பின் வாங்கித்தான் ஆக வேண்டும். முரட்டுத் தைரியம் எப்போதும் ஆகாது. அரிசி வெந்தால்தான் சோறு ஆகும். படம் நன்றாக இருந்தால்தான் வெற்றியாகும். எனது இயக்குநர்கள் அதை சரியாக செய்ததால்தான் நான் இங்கு நிற்கிறேன். ரஜினி நல்லப்படம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான், நீங்கள் திரையரங்கு வருகின்றீர்கள். நான் நல்லப்படங்களை, தொடந்து கொடுப்பேன்.

சில காரணங்களால், அரசியலில் சில கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று அந்த கூட்டணியை, ரசிகர்கள் வெற்றி பெற வைத்தனர். அது முதல் எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. எனது சில ரசிகர்களும் அரசியல் ஆர்வம் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களை, அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். என் பெயரை தவறாக பயன்படுத்த நினைத்தனர். ஆனால், அடுத்தடுத்து ஆதாயத்திற்காக, அணுகும் போது அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது.

அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். இப்போது, நடிகனாக என்னுடைய கடமையை செய்கிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்.அது கடவுளின் கையில்தான் உள்ளது. என்னைப் பற்றிய அரசியல் செய்திகளை நம்ப வேண்டாம். அப்படி நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வருவேன். காசு சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் இப்போதே விலகி விடுங்கள். நான் அரசியலுக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள். பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுபவர்களை பக்கத்துலயே வைத்துக்கொள்ளமாட்டேன். அந்த மாதிரி ஆட்களை கிட்டக் கூட சேர்க்க மாட்டேன். நுழையக் கூட விட மாட்டேன் ஒதுங்கிடுங்க. ரசிகர்கள் முதலில் குடும்பத்தை கவனிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள். அடிப்பட்டு சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள்” என்று பேசினார்

error: Content is protected !!