நாம எப்போ / எவ்வளவு தண்ணீர் குடிக்கணும் என்று நினைவூட்டும் ஆப்!

நாம எப்போ / எவ்வளவு தண்ணீர் குடிக்கணும் என்று நினைவூட்டும் ஆப்!

மழைக் காலத்தில் குறைவாகவும், வெயில் காலத்தில் அதிகமாகவும் தண்ணீர் குடிப்பதே தப்பு என்கிறார்கள் டாக்டர்கள். அதாவதுதினமும் சரியான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நுண்ணுயிரி களும், கிருமிகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இதேபோல் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வரும் நேரங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

water app dec 18

அதிக அளவு தண்ணீர் குடித்தால் என்ன  ஆகும்?

காலை, மாலை, இரவு உறங்குவதற்கு முன் என சிலர் ஒரே நேரத்தில் அதிக தண்ணீரைக் குடிப்பார்கள். குடிக்கும் நீரானது ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சென்று, இறுதியாக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரைக் குடிப்பதால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.சிறுநீரகத்தில் சேகரமாகும் தேவையற்ற கிருமிகளையும், பொருட்களையும் சுத்திகரிக்கும் பணியைச் செய்ய லட்சக்கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக தண்ணீரைக் குடிக்கும்போது சிறுநீரகத்துக்கும், நெஃப்ரான்களுக்கும் அதிக வேலைப்பளு கொடுக்கப்படும். இதனால் நெஃப்ரான்கள் செயலிழந்து, சிறுநீரக மும் பாதிக்கப்படுகிறது.

பேருந்து, வாகனப் பயணங்களில் சிலர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், சிறுநீர் வெளியேற்ற முடியாமல் இருப்பார்கள். இப்படித் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்கும்போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவையற்ற கழிவுப் பொருட்கள் பல மணி நேரம் சிறுநீர்ப் பையிலேயே தங்கியிருக்கும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவது போன்ற யூரினரி இன்ஃபெக்‌ஷன் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் என்ன?

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வில்லையெனில், உடல் சோர்வு ஏற்படும்.ஆண்கள் ஒரு நாளில் 3.5 – 4 லிட்டர், பெண்கள் 2.5 – 3 லிட்டர் தண்ணீருக்கும் குறையாமல் குடிக்க வேண்டும். நீராகத்தான் குடிக்க வேண் டும் என்பதில்லை, மோர், இளநீர், பழரசம் போன்ற வகையிலும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யலாம். குளிர்காலத்தில் இந்த அளவு கொஞ்சம் குறையலாம்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைந்தளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர் காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்றாலும், சூடான காபி, டீ பானங்கள் மூலம் உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும் என்று நினைத்து தாகத்தை அடக்கினால், உடலின் நீர்ச்சத்து குறைவது தொடங்கி, சிறுநீரகப் பிரச்னைகள் வரை ஏற்படும்.

ஆனாலும் நம்ம ஊர் தட்பவெப்பத்துக்கு நிறைய தண்ணீர் குடித்தாக வேண்டும். ஒவ்வொருவரின் உடல் அமைப்புக்கு ஏற்பக் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவும் மாறுபடும். இந்நிலையில் நாம் ஒரு நாளைக்கு எந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வந்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப் Hydro Coach – drink water’.

வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதற்கு மறந்துவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தவும், எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைச் சொல்லவும் இந்த ‘ஆப்’ பயன்படுகிறது.

எக்ஸ்ட்ரா தகவல்

உங்கள் உடல் எடை, வயது, பாலினம் ஆகியவற்றிற்கு ஏற்பச் சரியான அளவை இந்த ‘ஆப்’ மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கு வசதியாக உங்கள் உடல் எடை, வயது ஆகிய தகவல்களை முன்கூட்டியே இதில் பதிவு செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துகிறீர்கள்? எவ்வளவு தண்ணீர் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை அலாரம் வைத்ததுபோல் இந்த `ஆப்’ உங்களுக்கு நினைவுபடுத்திவிடும்.

போதுமான அளவு தண்ணீர் பருகுவதால் சருமம் பொலிவாக இருக்கும். இந்த ‘ஆப்’பை பயன்படுத்திச் சரியான முறையில் தண்ணீர் பருகிவந்தால், சில நாட்களிலேயே உடல் ஆரோக்கியம் பெறுவதை உணரலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த ‘ஆப்’ பயன்படும். இந்த ‘ஆப்’பில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான காய்கறிகள், பழ வகைகள் பற்றிய கட்டுரைகள், சமையல் செய்முறைகளை விளக்கும் பிரத்யேக வலைப்பூ உள்ளது. அதில் உடல்நலம் சார்ந்த பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாமாக்கும்.

error: Content is protected !!