அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு?

அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள் ; சென்னை உள்பட உலக நகரங்களுக்கு ஆயுள் நாட்கள் எம்புட்டு?

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை கைவிட்டு வேறு கிரகங்களில் மனிதன் வாழ வேண்டும் என்று கூறியிருந்த தகவலின் அதிர்வலையே இன்னும் ஓயாத நிலையில் சீனாவை சேர்ந்த ஹூனான் பலகலை  கழக அறிவியல் அகாடமி, பனி சிறுத்தை சரணாலயம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின அந்த ஆய்வில் அந்த ஆய்வில் பூமி வெப்பமடைவதால் எவரெஸ்ட் பனி மலை உருகிவருகிறது இதனால் கடலின் நீர்மட்டம் அதிக ரிக்குமென அஞ்சுன்றனர்.அண்டார்டிகா மற்றும் ஆர்டிக் பிரதேசங்கள் ஆகிய தென், வட துருவங்கள் புவி வெப்பம டைந்து வருவதால் மிக வேகமாக உருகி வருகிறது.இந்த நிலையில் கடல்மட்ட உயர்வு காரணமாக அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் இருக்கின்றன என்பதுதான் சோகத் தகவல்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை நியூயார்க், மியாமி, பாஸ்டன் போன்ற நகரங்களும், இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, புதுச்சேரி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களும் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. சீனாவின் ஷாங்காய் நகரம் கடல் நீரில் , முழ்கும் அபாய நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், நியூசவுத்வேல்ஸ், துருக்கியின் இஸ்தான்புல் இந்த நிகரங்களில்,கடலில் மூழ்கும் ஆபத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மேற்கு அண்டார்டிகாவிலுள்ள பனி அடுக்குகளிலிருந்து டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை பிரிந்து விட்டது. இப்பனிப்பாறையை பலகாலமாக அறிவியலர் ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வந்தனர். இறுதியாக அது ஜூலை 10 ஆம் தேதிலியிருந்து 12 தேதிக்குள் பிரிந்து விட்டதை அறிவியலர் அறிந்தனர். இதன் சுற்றளவு 5,800 சதுர கிலோ மீட்டர்களாகும். இதற்கு ஏ 68 என்று பெயரிட்டுள்ளனர். இதுவரை பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாகும் இது.

உலக அளவில் சூழலியலாளர்களை மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் இச்செய்தியை, வெறும் செய்தியாக கருதி கடந்து விட முடியாது. காரணம் பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் அதிகரிக்கும். கடல் மட்டம் அதிகரித்தால் நிலப்பரப்பு சுருங்கும். நிலம் சுருங்கினால் மனிதன் இடம் பெயர்தல் வேண்டும். அதிலும் 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 9 பில்லியனாக இருக்கும். இது 2100-ம் ஆண்டில் சுமார் 11 பில்லியனாக அதிகரிக்கும். அதன் படி கணக்கிட்டால், 2060-ம் ஆண்டில் சுமார் 1.4 பில்லியன் மக்களும், 2100-ம் ஆண்டில் சுமார் 2 பில்லியன் மக்களும் கடல் மட்ட உயர்வு காரணமாக அகதிகளாக இடம் பெயர்வார்கள் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

கடல் மட்டம் உயர்வு காரணமாக உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். உலகில் வளம் கொழிக்கும் நகரங்களில் பெரும்பான்மையானவை கடற்கரையில் தான் அமைந்துள்ளன. எனவே, கடல் மட்டம் உயரும் போது அந்நகர மக்களும், அவர்களது உடைமைகளும், அதனால் அப்பகுதியின் பொருளாதார சமநிலையும் பாதிப்புக்குள்ளாகும். இடம் பெயரும் மக்களால் நாட்டில் இடப்பற்றாக்குறை உண்டாகும். இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை பெருக்கம் நிறைந்த நாடுகளில் இவை சமூகப் பிரச்னைகளைக் கூட ஏற்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகின் மிக முக்கியமான நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இதனால் மூழ்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!