உதிர்ந்த ரோமம்= இன்றைய கருப்புத் தங்கம்’ ரேட் நிலவரம்!

உதிர்ந்த ரோமம்= இன்றைய  கருப்புத் தங்கம்’ ரேட் நிலவரம்!

உதிர்ந்த ரோமம் என்று எள்ளி நகையாடுவதற்குப் பயன்படும் பெரும்பாலானோர் அருவருப்படையும் தலைமுடிக்கு, சர்வ தேச மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆம்.. சர்வதேச மார்க்கெட்டில் “கருப்பு தங்கம்’ என வர்ணிக்கப்படுகிறது தலைமுடி, நம் இந்தியாவிலிருந்து கடந்த 1960ம் ஆண்டிலிருந்துதான் தலைமுடி எக்ஸ்போர்ட் தொடங்கியது. திருப்பதி கோவில் தேவஸ்தானம் நீள முடி 1 கிலோ 10,500 ரூபாய்க்கும், குட்டை முடியை 1 கிலோ 1500 ரூபாய்க்கும் விற்கிறதாம். இவற்றை வாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் ரூ.4500 கோடிக்கு தலைமுடியை ஏற்றுமதி செய்கின்றன.

hair sep 20

இந்திய தலைமுடிக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளில்பல ரகங்களில் தலை முடி கிடைக்காததே இதற்கு காரணம். ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இந்த தலைமுடிகள் மூலம் அமினோ அமிலம் போன்ற ரசாயனங்களை தயாரிக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து தலை முடி தரை மார்கமாக மியான்மற்கு கடத்த படுகிறது. சீனா தான் முடி வர்த்தகத்தில் மிக பெரிய வியாபாரி ஆண்டுக்கு ரூ.30,000 கோடிக்கு ஏறுமதி விற்பனை செய்கிறது. இந்தியா 2500 கோடிக்கு ஏற்றுமதி விற்பனை செய்கிறது. வெளிநாட்டவர் இந்திய முடி என்றால் மிகவும் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் சீனா தங்கள் முடிகளுக்கு நடுவில் இந்திய முடிகளை கலந்து ஏற்றுமதி செய்வது உண்டு

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன், சிக்குமுடியை வாங்குவதற்காக, ஒரு கம்பின் முனையில் மிட்டாயை சுற்றிய படி, ‘சிக்கு முடி மிட்டாய் வாங்குறதே’ என கூவிய படி, வீதிகளில் வலம் வருவர். சிறுவர்களும், வீட்டில் சேகரித்து வைத்திருந்த சிக்கு முடியை எடுத்துச்சென்று, அவர்களிடம் கொடுத்து, மிட்டாயை வாட்ச் போன்ற வடிவத்தில் கைகளில் வாங்கி வருவர்.தற்போது, குரல் கொடுப்பதற்கு பதில், குரல் பதிவு செய்த ஒலிப்பெருக்கியை, இருசக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு, காஞ்சிபுரம் நகர வீதிகளில் சிக்குமுடி வாங்குபவர்கள் வலம் வருகின்றனர். சிக்குமுடிகளை சேகரித்து வைத்திருப்பவர்களிடம், 10 கிராம், 10 ரூபாய்க்கு வாங்கிச் செல்கின்றனர்.

“பொதுமக்களிடமிருந்து, 10 கிராம் தலைமுடியை, 10 ரூபாய்க்கு வாங்குகிறோம். 500 கிராம் முடி சேர்த்தால்,அன்றைய பணியை முடித்துக்கொண்டு, எங்கள் முகவரிடம், சிக்கு முடியை கொடுத்து விடுவோம். அவர் எங்களுக்கு, 500 ரூபாய் சம்பளம் கொடுத்து விடுவார்”என்கிறார்கள்

Related Posts

error: Content is protected !!