போஸ்டல் பேமென்ட் வங்கி: சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.50,000 பரிசு

போஸ்டல் பேமென்ட் வங்கி: சிறந்த லோகோ வடிவமைப்புக்கு ரூ.50,000 பரிசு

தற்போது, நாடு முழுவதும் அஞ்சலக துறைக்கு 1.55 லட்சம் தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில், 1.3 லட்சம் அலுவலகங்கள் கிராமப் பகுதிகளில் உள்ளன. இத்துறையில், 3.5 பணியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி சார்பில் முதல்கட்டமாக 650 கிளைகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

bank june 12

இதுதொடர்பாக, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலகப் பணியாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ரூ.800 கோடி தொகுப்பு நிதி ஒதுக்கீட்டுடன் அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கி அமைக்கப்படுகிறது. இவ்வங்கியின் சார்பில் முதல்கட்டமாக 650 கிளைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கிளைகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த 650 கிளைகளையும் வரும் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முழுமையான அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.இந்த இலக்கை அடைவதற்கு, அஞ்சலகத் துறையில் பணியாற்றும் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அந்தக் கடிதத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேமென்ட் வங்கிக்கான லோகோ வடிவ மைப்பு மற்றும் விளம்பர வாசகம் (டேக்லைன்) ஆகியவற்றை வடிமைப் பவர்களுக்கு ரூ.50,000 பரிசு வழங்க தபால் துறை திட்டமிட்டிருக்கிறது. கடந்த ஜூன் 10-ம் தேதி முதல் இந்த போட்டி தொடங்கப்பட் டுள்ளது. வரும் ஜூலை 9-ம் தேதி வரை இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்திய குடிமக் கள், நிறுவனங்கள், விளம்பர நிறுவ னங்கள் என யார் வேண்டுமா னாலும் போட்டியில் கலந்துகொள் ளலாம் என்று தபால்துறை தெரிவித் துள்ளது.மத்திய அரசின் இணைய தளத்தில் (MyGov ) பதிவேற்றலாம். தேர்வுக்குழு மற்றும் வடிவமைப் பாளர்கள் சிறந்த 20 வடிவமைப்பை தேர்வு செய்வார்கள். அதன் பிறகு வாக்கெடுப்பு முறையில் சிறந்த லோகோ தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரூபாய் குறியீடு மற்றும் ஸ்வாச் பாரத் லோகோ ஆகியவையும் பொதுமக்களிடம் போட்டி வைத்தே தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களை அடிப்படையாக வைத்து இந்த வடிமைப்பு முடிவு செய்ய வேண்டும் என்று தபால்துறை கூறியுள்ளது.

Related Posts

error: Content is protected !!