இந்திய தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள் பட்டியல்! – AanthaiReporter.Com

இந்திய தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள் பட்டியல்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், National Institutional Ranking Framework (NIRF) India Rankings 2018 என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரேங்கிங் பட்டியலை வெளியிட்டார். அதில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என்று 9 பிரிவுகள் உள்ளன. 2017-ஆம் ஆண்டு தரவரிசையில் டெல்லியைச் சேர்ந்த கல்லூரிகளின் அதிகளவில் இடம்பெறவில்லை. அந்தக் கல்லூரிகள் தரவரிசையில் இடம்பெற இந்த ஆண்டு தான் முதல் முறையாக விண்ணப்பித்திருந்த நிலையில் 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

முதல் 10 இடங்களின் மூன்றாம் இடத்தில் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி, ஐந்தாம் இடத்தில் சென்னை பிரசிடென்சி கல்லூரி, ஆறாம் இடத்தில் லயோலா கல்லூரி, சென்னை மற்றும் பத்தாவது இடத்தில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியும் இடம்பெற்றுள்ளன.

சிறந்த பல்கலைகழகங்கள் தரவரிசையில், 4 வது இடத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகம், 13வது இடத்தில் கோவை பாரதியார் பல்கலைகழகம், 16வது இடத்தில் வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, 18 வது இடத்தில் மெட்ராஸ் பல்கலைகழகம் உள்ளன.

ஓவர் ஆல் ரேங்கிங்கில், ஐ.ஐ.டி. பெங்களூரு முதலிடத்திலும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் இரண்டாவது இடத்திலும், அண்ணா பல்கலைகழகம் 10வது இடத்திலும் உள்ளன.

நாட்டின் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்தக் கல்லூரியும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. நாட்டின் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 4-வது இடத்தையும், கோயம்புத்தூரைச் சேர்ந்த அமிர்த விஷ்வா வித்யாபீடம் 9-வது இடத்தையும் பெற்றுள்ளன.

நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் வேலூரைச் சேர்ந்த கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி 3-வது இடத்தையும், புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை மடுத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 6-வது இடத்தையும், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.