இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -டில் பணி வாய்ப்பு! – AanthaiReporter.Com

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -டில் பணி வாய்ப்பு!

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பிரபலம். இதில் அதிகாரி பணியிடங்களை 2019 பிப்ரவரியில் நடத்தப்படும் ‘GATE’ தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

பிரிவுகள்: மெக்கானிக்கல், சிவில் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 30.06.2019 அடிப்படையில் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏ.ஐ.சி.டி.இ., யூ.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற 4 வருட இன்ஜினியரிங் படிப்பை மேற்கண்ட பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கேட் தேர்வில் தேர்ச்சியும், மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: டெபிட் கார்டு வழியாக செலுத்தினால் ரூ.236/–ம், கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் வவுச்சர் மூலமாக செலுத்தினால் ரூ.271/-ம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க
: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 15.01.2019

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு