உதிரி பாகங்களை வாங்கி தானே ஐபோன் செய்து கொண்ட சீன ஆசாமி – வீடியோ

உதிரி பாகங்களை வாங்கி தானே ஐபோன் செய்து கொண்ட சீன ஆசாமி – வீடியோ
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியாளராக இருக்கும் ஸ்காட்டி ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியிருக்கிறார். சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென் ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் ஐபோனின் உதிரி பாகங்களை தனித்தனியே வாங்கி புதிய ஐபோனை உருவாக்கி கொண்டுள்ளார்.
maxresdefault
சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஸ்காட்டி உணவகத்தில் யாரோ கொடுத்த யோசனையை தொடர்ந்து தனக்கான பிரத்தியேக ஐபோனை தயாரிக்க முடிவு செய்தார். அனைத்து பாகங்களையும் சிரமமின்றி வாங்க ஸ்காட் ஐபோன் 6S மாடலை தயாரிக்க முடிவு செய்தார். ஏற்கனவே இவர் ஐபோன் 6S ஸ்மார்ட்போனினை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபோனை தயாரிக்க முதலில் அடிப்படையிலான நான்கு பாகங்கள்: திரை, ஷெல், பேட்டரி மற்றும் லாஜிக் போர்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தினார். முதலில் உடைந்த திரையை வாங்கி அதனை புதிய பாகங்களுடன் சரி செய்தார். லாஜிக் போர்டினை முழுமையாக தயாரிக்க முடியாது என்பதால் இதனை முழுமையாக வாங்கி விட்டார்.
இத்துடன் பேட்டரியை வாங்குவது எளிமையாகவும் விலை குறைவாக அதாவது 5 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.322க்கு  வாங்கியதாக தெரிவித்துள்ளார். தனக்கான ஐபோனை செய்ய பல்வேறு கடைகளுக்கும் செல்போன் சரி செய்யும் பள்ளிக்கும் சென்றதாக ஸ்காட் தெரிவித்துள்ளார்.
மேலும் பொறுமையுடன் தனது வீடியோவை பார்க்கும் அனைவராலும் புதிய ஐபோனை தயாரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்காட் ஆலென் ஐபோன் உருவாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை இங்கு காணலாம்..
error: Content is protected !!