தோட்டக்கலை படித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி! – AanthaiReporter.Com

தோட்டக்கலை படித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி!

தமிழக அரசில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஹார்டிகல்சர் (தோட்டக்கலை) துறையில் காலியாக உள்ள 130 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் : தோட்டக்கலை துணை இயக்குநர் பதவியில் 100 இடங்களும், தோட்டக்கலை அதிகாரி பதவியில் 30 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களாக இருந்தால் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : தோட்டக்கலை துணை இயக்குநர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்திருக்க வேண்டும். தோட்டக்கலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்சி., (ஹார்டிகல்சர்) முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை மற்றும் கோவையில் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க : www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் 150 ரூபாய். விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய்.

கடைசி நாள் : 2017 டிச., 27.

விபரங்களுக்கு : ஆந்தை வேலை வாய்ப்பு