சென்னையில் எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்கும்?

சென்னையில் எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்கும்?

பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை. மேன் ஷன்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள், வாகனங்களில் குடும்பத்துடன் வந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டே உணவருந்தும் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் இரவு 12 மணிவரைகூடப் பசியாற்றும் பெருநகரம் இது. தனக்கென்ற பிரத்தியேக மான உணவுகளுடன் பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிடமிருந்தும் வந்துசேர்ந்த உணவு களையும் தன்னுடையதாக மாற்றிக்கொண்ட அலாதியான உணவுக் கலாச் சாரம் நம் சென்னை யுடையது. தெருவுக்குத் தெரு இருக்கும் பிரியாணிக் கடைகளும் பரோட்டா கடைகளும் இதற்குச் சான்று. இந்நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு சென்னை ஐகோர்ட் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கணேஷ் பிரபு என்பவர், உணவகமொன்றில் இரவு 10 மணி அளவில் உணவருந்தச் சென்றபோது, காவல் துறையினர் அந்த உணவகத்தை மூடச்சொன்னதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே காவல் துறை தலையிட்டு கடைகளை மூட வேண்டும். ஆனால் உணவகங்கள் அனைத்தும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வருகிறது. உணவகங்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாநகராட்சி ஆணையரை எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டனர் நீதிபதிகள். சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை மணி நேரம் கடைகள்திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு சென்னை மாநகராட்சியிடம் அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கை அக்டோபர் 3ஆம்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

error: Content is protected !!