சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ – டிசம்பர் 20ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ – டிசம்பர் 20ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

இப்போதைய பொடிசுகள் & இளசுகளின் உள்ளங்கவர் நாயகன் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தை வெளியிட இடைக் காலத் தடை என்று வெளியான ஒரு செய்தி தொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு படம் திட்டமிட்டப்படி டிசம்பர் 20 ரிலீஸாகும் என்று உறுதி அளித்துள்ளது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அதே சமயம் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கிய 10 கோடி கடன் தொடர்பாக டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் ‘ஹீரோ’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டது. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருக்கும் எனச் செய்திகள் வெளியாகின.

சிவகார்த்திகேயன் படம் என்பதால் பலரும் இந்தச் செய்தியைப் பகிரத் தொடங்கினார். இது தொடர்பாக ‘ஹீரோ’ படத்தைத் தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அனுப்பி யுள்ள விளக்கச் செய்தியில் , “இதனால் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை.

சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப் பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே.

இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்‌ ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. இந்த நபர்கள், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ’ஹீரோ’ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறோம். இப்படித் தூண்டுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாகக் கடுமையாக வலியுறுத்துகிறோம். இப்படியான மோசடி நிகழ்வு அல்லது எங்கள் திரைப் படம் ’ஹீரோ’ தொடர்பாக எந்தத் தவறான தகவல் வந்தாலும், அப்படியான ஏமாற்று வேலை களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்.

அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறை யான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் ஃபிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்” என்று தெரிவித்து உள்ளனர்.

அத்துடன் ட்விட்டரில் #HERO – TV, Radio, News – enga thirumbunaalum namma news thaan! Thanks for the free promotions 🔥 Namakku fans ellaa pakkamum irukkanga pola! 😄 To our fans – don’t worry bha! Padam confirm December 20 varudhu! என்றும் “’ஹீரோ’ படத்துக்காக நாங்கள் செய்துள்ள அனைத்து கடின உழைப்பும், ஒரு சமூகப் பொறுப்புள்ள நல்ல பொழுதுபோக்குப் படத்தை உங்களுக்குத் தர வேண்டும் என்பதால்தான். இரவு பகலாக அதற்காக உழைத்து வருகிறோம். எங்களையும், ரசிகர்களையும் தவிர இந்தப் படத்துக்கு யார் உரிமை கொண்டாடினாலும் அது பொய்யே. திட்டமிட்டபடி ’ஹீரோ’ டிசம்பர் 20 முதல் திரையில்” என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!