நம்ம இந்தியாவில் ‘பெண்கள் பீர்’ என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் ! – AanthaiReporter.Com

நம்ம இந்தியாவில் ‘பெண்கள் பீர்’ என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் !

நாடெங்கும் மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் துடித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஹரியானா மாநிலத்தில் குருகிராம் பகுதியில் உள்ள பப் ஒன்றில் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் ஒரு பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மதுபானம் அருந்தும் பழக்கம் உடைய பெண்கள் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிகரித்த ஆபத்து ஆகியன இடையே உள்ள தொடர்பிற்கு மேலும் சில ஆதாரங்கள் வெளியிடப் பட்டிருந்தது. தினமும் அரை கோப்பை ஒயின் அல்லது சிறிதளவு பீர் அருந்துவது மார்பக புற்று நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் அறிக்கை கூறி இருந்தாலும் பீர் குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்திம் குருகிராம் பகுதியில் உள்ள அர்டார் 29 என்ற ‘பப்’ ஒன்றில் ‘இந்தியாவின் முதல் பெண்கள் பீர்’ என்ற அடைமொழியுடன் பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘‘பொதுவாக பீரின் கசப்பு சுவையை பெண்கள் பலரும் விரும்புவதில்லை. இதனால் தான் பீரின் சுவையில் ஒரு புது மாறுதலைச் செய்து பெண்களுக்கான முதல் பீர் என அறிமுகப்படுத்தி உள்ளோம்” என அந்த பப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து நிர்வாகத்தினர் கூறுகையில்; “முதலில் சம்மர் பீர் என்று தான் இந்த மாற்றுச்சுவை உள்ள பீரை அறிமுகம் செய்தோம். ஆனால், வாடிக்கையாளர்களாலே ‘பெண்கள் பீர்’ என்ற பெயர் வழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த பீர் மிகவும் இனிப்பானதாக இருப்பதாலே இதை இவ்வாறு அழைக்கின்றனர். பெண்களும் இனிமையானவர்கள் தானே” என்று தெரிவித்துள்ளனர்.