மனநிலை பாதித்தவர்கள் மறுவாழ்வுக்கென, வழிகாட்டி முறைகள் அல்லது திட்டம்!- சுப்ரீம் கோர்ட் ஐடியா

மனநிலை பாதித்தவர்கள் மறுவாழ்வுக்கென, வழிகாட்டி முறைகள் அல்லது திட்டம்!- சுப்ரீம் கோர்ட் ஐடியா

தேசிய மனநல கழகம் மற்றும் நரம்பியல் துறை சார்பில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு எடுத்த ஒரு சர்வேயில் சுமார் 13.7 சதவீதம், அதாவது 15 கோடி இந்தியர்கள் பல்வேறு விதமான மனநல பாதிப்புக்களால் அவதிப்பட்டு வருவது தெரிய வந்திருந்தது.. இவர்களில் 10.6 சதவீதம் பேர் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பிரச்னைகள் காரணமாக, அது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் பொறுப்பு 2014ம் ஆண்டு தேசிய மனநல கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ind feb 22

அதில் மது, புகை பயன்படுத்துவோர், பிரச்னைகள், மனஅழுத்தம், பயம் உள்ளிட்ட பல காரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. கிராமப்புறங்களை விட நகர்புறத்தில் வசிக்கும் மக்களே மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி, வேகமான வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் பொருளாதார காரணங்களால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையே அதிகம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர், ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். 40 முதல் 49 வயதுடைய பெண்களே மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு கீழுள்ள 22.4 சதவீதம் பேர் போதை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால் மனநலம் திக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த காரணங்களையும் ஆராய்கையில் 13.9 சதவீத ஆண்களும், 7.5 சதவீத பெண்களும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருந்தது. அதிலும் இளவயதினரிடையே 13 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களில் 7.3 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருந்தது.

இந்நிலையில் மனநிலை பாதிப்படைந்து முழுவதும் குணமடைந்தவர்களின் மறுவாழ்வுக்கான வழிகாட்டி முறைகளை வகுக்கும்படி மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் இன்று கேட்டு கொண்டுள்ளது. இந்த விவகாரம் மிக உணர்வுபூர்வமுடையது என்றும் அது சுட்டி காட்டியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள உத்தரவு ஒன்றில், மனநிலை பாதிப்படைந்த நபர்கள் சீரடைந்த பின், அவர்களை வீட்டிற்கு திரும்ப அழைத்து செல்வதற்கு குடும்பத்தினரே முன்வருவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் இருந்த நீதிபதிகளான டி.ஒய். சந்திரசூட் மற்றும் எஸ்.கே. கவுல் ஆகியோர் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம், இது மிக, மிக உணர்வுபூர்வமிக்க விவகாரம். நீங்கள் (மத்திய அரசு) இதனை கருத்தில் கொள்ள வேண்டும். மனநிலை சிகிச்சை காப்பகத்திற்கு சென்று சிகிச்சை பெறும் நபரொருவர், சிகிச்சை முடிந்த பின் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஒருவரும் முன்வருவதில்லை. இவ்விவகாரம் பற்றி நீங்கள் (மத்திய அரசு) யோசிக்க வேண்டும் என கூறினர். அவர்கள் மக்கள் வாழும் சமூகத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கூறினர். இது மிக எளிதில் நிகழ்த்த கூடியது. நீங்கள் மாதிரி திட்டமொன்றினை எங்களிடம் அளியுங்கள். அதனை மாநில அரசுகளிடம் அளித்து விவரம் கேட்போம். எங்களிடம் ஒரு திட்டத்தினை அளியுங்கள் என மத்திய அரசிடம் கூறினர்.

அதை ஒப்புக் கொண்ட சொலிசிடர் ஜெனரல், இந்த விசயத்தில் சுகாதார அமைச்சகம் மற்றும் சமூக நீதி அமைச்சகம் ஆகியவை ஈடுபட வேண்டிய நிலையில் காலஅவகாசம் தேவை என கூறினார். இதனை அடுத்து மத்திய அரசிற்கு 8 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்பின், இந்நீதிமன்றத்தினால் கோரப்பட்டுள்ள ஒப்புதல் மத்திய அரசினால் பரிசோதனை முயற்சியாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. மனநிலை பாதித்து காப்பகம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுவதும் குணம் பெற்ற நபர்களின் மறுவாழ்வுக்கென, வழிகாட்டி முறைகள் அல்லது திட்டத்தினை மத்திய அரசு உருவாக்கும் என அமர்வு கூறியுள்ளது.

Related Posts

error: Content is protected !!