கிளாக்சோஸ்மித்கிலைன் நிறுவனத்தை ஹிந்துஸ் தான் யுனிலிவர் வாங்கப் போகுது – AanthaiReporter.Com

கிளாக்சோஸ்மித்கிலைன் நிறுவனத்தை ஹிந்துஸ் தான் யுனிலிவர் வாங்கப் போகுது

கோக், -பெப்சி போட்டி விளம்பரங்களால் இரண்டும் உடல்நலத்துக்கு கேடு என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதைப் போன்று காம்பிளான், ஹார்லிக்ஸ் இரண்டும் மோசடியானது, உடல் நலத்துக்கு நல்லதல்ல என பரஸ்பரம் கூறிக்கொண்ட போதிலும் காட்சி ஊடகங்கள் இந்த விளம்பரங்களை இன்றளவும் ஏன் ஒளி பரப்பி இன்றளவும் அதிகமாக விற்பனையாகும் ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட தயாரிப்புகளின் உற்பத்தி மற் றும் விற்பனையை செய்து வந்த கிளாக்சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் இந்தியா நிறுவனத்தை ஹிந்துஸ் தான் யுனிலிவர் வாங்குவது உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனமான கிளாக்சோஸ்மித் கிலைன் நிறுவனத்தின் இந் தியப் பிரிவான கிளாக் சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனம், தனது ஹார்லிக்ஸ், பூஸ்ட், மால் டோவா உள்ளிட்ட ஹெல்த் ட்ரிங்க் பிராண்டுகள் மற்றும் குரோசின், ஐயோடெக்ஸ், சென் சோடைன், ஆக்ட்ரிவின் உள் ளிட்ட மருந்து பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையைச் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பிராண்டுகள் அந்தந்தப் பிரிவில் இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

ஆனால், இந்த நிறுவனம் தற்போது விற்பனைக்கு வந்துள் ளது. இதை வாங்குவதில் ஹிந்துஸ்தான் யுனிலிவர், நெஸ்லே, கோகோ கோலா, பெப்சி, கெலாக் மற்றும் சைடஸ் ஹெயின்ஸ் உள்ளிட்ட நிறு வனங்கள் போட்டியில் இருந் தன. இந்நிலையில் இறுதியாக ஹிந்துஸ்தான் யுனிலிவர் இந்த நிறுவனத்தை வாங்குவது முடிவாகியுள்ளது. இந்நிறு வனத்தை வாங்குவதற்கான ஒப்புதலையும் ஹிந்துஸ்தான் யுனிலிவர் இயக்குநர் குழு வழங்கியுள்ளது.

இந்த இணைப்பு 100 சதவீத பங்குப் பரிமாற்றம் மூலம் நடக்க உள்ளது. ஒரு ஜிஎஸ்கே ஹெல்த் கேர் பங்குக்கு 4.39 ஹிந்துஸ் தான் யுனிலிவர் பங்குகள் வீதம் வழங்கப்பட உள்ளன. இந்தப் பங்குப் பரிமாற்றத்தின் மதிப்பு ரூ. 31,700 கோடி ஆகும்.

இதுகுறித்து ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் தலை வர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சிவ் மேத்தா கூறுகையில், கிளாக்சோஸ்மித்கிலைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் எங்களுடைய தொழில் மேலும் விரிவடையும். அதன் பிரபல பிராண்டுகள் மூலம் புதிய பிரிவுகளில் எங்களுடைய தொழிலை விரிவுபடுத்தி இந்திய நுகர்வோர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் எங்களுடைய உணவு மற்றும் உற்சாக பானங்கள் விற்பனை ரூ. 10 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

டெயில் பீஸ்:

இந்த மழைக் காலங்களில், நோய் தொற்று அதிகமாக இருக்கும். அதனால், வழக்கமான பானங்களில் இருந்து, ஆரோக்கிய பானங்கள் பக்கம் வாருங்கள். காலை, மாலை, இரவு நேரங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு, டீ தயாரிக்கும் போது, இஞ்சி டீ, ஆவாரம்பூ டீ, புதினா டீ, மஞ்சள் மிளகுத் தூள் கலந்த பால், சுக்குமல்லி காபி, மசாலா டீ, தேன் ஊற்றப்பட்ட பால் போன்றவற்றை முயற்சித்துப் பார்க்கலாம். மஞ்சள், தேன் ஆகியவை, வயிறு மற்றும் தொண்டைப்புண்ணை ஆற்றும். இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இஞ்சி உடம்பில் உள்ள வாயுத்தொல்லை, ஒற்றை தலைவலி போன்றவற்றை தடுக்கும். துளசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாலை நேரங்களில், தக்காளி, காளான், மக்காச்சோளம் போன்றவற்றில் சூப் தயாரிக்கும் போது, மிளகுத் தூளையும் சேர்த்தால், உணவே ஆரோக்கியத்துக்கு மருந்தாகும்.