மீ டு மூலம் வெளியாகும் பாலியல் குறித்து விசாரணை! – மத்திய அரசு முடிவு!!

மீ டு மூலம் வெளியாகும் பாலியல் குறித்து விசாரணை! – மத்திய அரசு முடிவு!!

தற்போது  பாடகி சின்மயி மூலம் தமிழத்தில் சூறாவளிப் புயலை ஏற்படுத்தி இருக்கும் மீடூ இயக்கம் (MeToo campaign) மூலம் பெண்கள் கூறி வரும் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்க முடிவு செய்துள்ளது.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மீடு இயக்கம் வழியே சமூக ஊடகங்களில் வெளிப்படையாக பேசி வருகிறார்ள். ஹாலிவுட்டில் ஆரம்பித்த இந்த மீடு இயக்கம் தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும்  வேகமாக பரவி வருகிறது.

அண்மையில் பாலிவுட்டின் பிரபல நடிகரான நானா பட்டேகர் மீது பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்த பின் இந்தியாவில் மிடூ இயக்கம் சூடு பிடித்தது. நானா பட்டேகரை தொடர்ந்து பாஜக எம்.பி எம்.ஜே. அக்பர், தமிழ் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது பெண்கள் பாலியல் புகார்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மிடூ புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள மூத்த நீதிபதி தலைமையில் சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட மேனகா காந்தி நாடு முழுவதும் பெண்கள் கூறி வரும் பாலியல் புகார்களை விசாரிக்க விரைவில் மூத்த நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் அமைக்கும்.

பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகார்களைக் கையாள்வதற்கான சட்டம் மற்றும் நிறுவனங்களின் கட்டமைப்பை ஆராய்ந்து அவற்றை எவ்வாறு பலப்படுத்துவது என இந்த சட்ட வல்லுநர்கள் குழு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். மிடூ இயக்கம் வழியே பாலியல் புகார் கூறிய அனைத்து பெண்களையும் நான் நம்புகிறேன். அவர்கள் அனுபவித்த வலியையும் நான் நம்புகிறேன் என மேனகா காந்தி டுவிட்ட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுதல்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அறிக்கை ஒன்றையும் மேனகா காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் எங்கு புகார் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேச வேண்டும் என மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!