அரசு ஊழியர்களுக்கான சம்பளக் குளறுபடிக்கு என்ன காரணம்?

அரசு ஊழியர்களுக்கான சம்பளக் குளறுபடிக்கு என்ன காரணம்?

தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகை இம்மாதம் 29ம் தேதி வருவதால், இந்த மாத சம்பளத்தை 28ம் தேதியே வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

salary oct 26

ஆனால் தற்போது வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே ஊதியம் என அறிவிக்கப்பட்ட அரசாணை செயல்படுத்தப்படாது என கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய அறிவிப்புபடி வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம் என்ன என்று விசாரித்த போது ‘

31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி. அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலையில் BATCH அனுப்ப இயலும்.
ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப் பெற்றது. அதனால் வழக்க போல்தான் சம்பளம் போட முடியும் என்று தெரியச் வந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!