சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் – மத்திய அரசு முடிவு!

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் – மத்திய அரசு முடிவு!

குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற சம்வங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் ஆங்காங்கே கும்பல் தாக்குதல் வன்முறை சம்பவங்கள் நடை பெற்றது.  இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களை கேட்டுக்கொண்டது. பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்களும் தவறான தகவல்களை தடுக்க நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனாலும் இப்படி தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப் பேற்க முடியாது என்று சமூக வலைதள நிறுவனங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனி டையே இது தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  பேஸ்புக், வாட்ஸப் கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கை ஐகோர்ட் விசாரிக்கலாம் எனவும், ஆனால் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷ சாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்து விட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸப் நிறுவனம் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வாட்ஸப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் சமூக வலைதளங்கில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்தனர். காட்சி ஊடகங் களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அமைப்பு இருப்பதை போல, சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும், இது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

இதனிடையே டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை போல வாட்சப் நிறுவனம் வழங்குவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Posts

error: Content is protected !!