தேர்தல் செலவுக்காக தயாரான கள்ள நோட்டுகள் – ம.பி.யில் ஷாக்! – AanthaiReporter.Com

தேர்தல் செலவுக்காக தயாரான கள்ள நோட்டுகள் – ம.பி.யில் ஷாக்!

தேர்தலுக்காக கள்ள ஓட்டுகள் ரெடி செய்வதை கேள்வி பட்டிருப்பீர்கள்.. பார்த்திருக்கவும் கூடும். ஆனால் வர இருக்கும் தேர்தல் செலவுக்காகவும், வாக்காளர்களுக்கு கொடுக்கவும் கள்ள ஒட்டுகள் அச்சடித்திருப்பதை பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.. இதோ நீங்களே படியுங்கள்;

ம.பி. சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கள்ளநோட்டுகளை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்த பணத்தை பட்டுவாடா செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தனது சகாக்கள் மூலம் கள்ளநோட்டுகள் அச்சடிக்கும்படி போபாலில் நடந்துள்ளது. இது பற்றிய தகவல் கசிந்ததும் போலீசார் உஷார் ஆனார்கள். கள்ளநோட்டு கும்பலை பிடிக்க தொடர்ந்து கண்காணித்தனர்.

கடைசியில் போபால் பக்கம் உள்ள ராஜ்கார் மற்றும் ஹோசன்காபாத் ஆகிய இடங்களில்தான் கள்ளநோட்டு அச்சடிப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அப்தாப் அலி என்ற முஸ்தாக் கான்(42) என்பவரை கைது செய்தனர். போபாலைச் சேர்ந்த அவர் ஒரு ஆக்கி வீரர்.  தேசிய அளவில் ம.பி.க்காக 7 முறை ஆடி இருக்கிறார். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரிடம் இருந்து ரூ.31.50 லட்சம் மதிப்புக்கு கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதிலும் புத்தம் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் சிக்கின.

இவர் தான் கள்ள நோட்டுகளை அச்சடித்து ம.பி.யில் புழக்கத்தில் விட்டவர். தீவிரவாதிகளிடம் இருந்து தான் கள்ள நோட்டுகளுக்கான ஆர்டர் வருவது வழக்கம். பின்னர் தன் சகாக்கள் மூலம் அவற்றை அச்சடித்து வினியோகிப்பது உண்டு.
ஆனால் கடந்த ஓராண்டாக இந்த தொழிலில் இவர் இறங்கி உள்ளார் என்பது தெரிய வந்தது. அவரது தகவலின்பேரில் கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.அசல் நோட்டை ஸ்கேன் செய்து பின்னர் பிரிண்டிங் செய்து அதன்பிறகே கட்டிங் செய்து பண்டல் பண்டாக கட்டுவோம் என்று கூட்டாளிகள் 5 பேரும் கூறினர்.

தற்போது தேர்தலுக்கு முன்பாக ரூபாய் 3 கோடி கள்ள நோட்டு வேண்டும் என்று அச்சடிக்க கொடுத்துள்ளனர். அது யார்… எந்த கட்சிக்காக அந்த நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன… கள்ள நோட்டு அச்சடிக்க எங்கிருந்து காகிதங்கள் வாங்கப்பட்டன என்று விசாரித்து வருவதாகவும் அந்த உண்மையை அப்தாப் அலி சொல்ல மறுப்பதாகவும் போலீஸ் எஸ்பி சிமலா பிரசாத் கூறினார். பிடிபட்ட கள்ளநோட்டுகள் அனைத்தும் அசல் நோட்டுகள் போலவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.