கொரில்லா – விமர்சனம்!

கொரில்லா – விமர்சனம்!

நம் இந்தியாவின் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்துறையில் பணியாற்றுகிறார்கள். சில சமயங்களில் விதைகள், உபகரணங்கள் மற்றும் பிற தேவையான பொருட்களை வாங்க விவசாயிகள் அதிகளவில் கடன் வாங்கி, அதனை அடைக்க போராடுகிறார்கள். பருவ மழை பொய்த்து போகும் பட்சத்தில், சரியாக அறுவடை செய்ய முடியாமல் போக, கடனை திரும்ப கட்ட முடியாமல், சில விவசாயிகள் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் அப்படியான விவசாயிகள் குறித்தும் அவர்களின் முக்கியத்துவம் குறித்தும் ‘கொரில்லா’ படம் மூலம் ஜஸ்ட் லைக்-காக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

பிராடு, பித்தலாட்டம், மோசடி, திருட்டு போன்றவைகளை செய்து வரும் ஜீவாவுடன் சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர்களுக்கு பணத் தேவை அதிகமாக இருக்கிறது. அதையொட்டி ஒரு பணக்காரர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள், அதையும் டாஸ்மாக் பாரில் அமர்ந்து ஓப்பனாக பேசுவதைக் கேட்கும் ஒரு விவசாயி ரோலில் வரும் மதன் இவர்களுடன் சேர்ந்துக் பேங்க்-கில் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். இந்த நான்கு பேருடன் காங்க் என்ற சிம்பன்ஸி குரங்கும் சேர்ந்து அடிக்கும் கொள்ளையினால் விவசாயிகளுக்கு நன்மை கிடைப்பதே படத்தின் கதை.

நாயகன் ஜீவா, காமெடி, காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் எல்லாவற்றிலும் கொஞ்சம் முழுமை யில்லாமல் செய்திருக்கிறார். நாயகி ஷாலினி பாண்டே புதுசாக இருந்தாலும் இளசாக இருக்கிறார். சதீஷ் தன் காமெடியால் நீண்ட இடைவெளிக்கு பிறகு  தனிக் கவனம் பெறுகிறார். கொரில்லாவை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை

குருதேவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை பொருத்தம், ரூபனின் எடிட்டிங் பர்ஃபெக்ட்.

செல்லூர் ராஜூவின் தெர்மாகோல், கமல்ஹாசனின் டிவிட், விவசாயத்தை காப்பாற்றுங்கள் என்ற முழக்கம் என சமூகவலைதளங்களில் டிரெண்டாகும் விஷயங்களை கேஷூவலாக சொல்லி சிரிப்பு மூட்டினாலும் , தேன் தடவிய மருந்தாக  சமீபத்திய ஆண்டுகளில், ஊதியத் தொகை அதிகரிப்பு, பயிர் விலையில் வீழ்ச்சி உள்ளிட்ட சில காரணங்களால் விவசாயிகளின் வருமானம் குறைந்து கடன் தொல்லை யால் சூசைட் செய்யும் விவசாயிகளுக்கான குரலாக கொரில்லாவை கொண்டு சென்ற இயக்குநர் பாராட்டுக்குரியவர்தான்.. ஆனால் அதை ஹேண்டில் செய்ததில் முதிர்ச்சியின்மை ஏராளமாக வெளிப்பட்டாலும் ஒரு டயம் பாஸ் மூவி என்பதை மறுக்க முடியாது

மார்க் 3/5

error: Content is protected !!