இந்திய மக்களை ஆன்லைன் அடிமைகளாக்கும் கூகுள், ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வரி! – AanthaiReporter.Com

இந்திய மக்களை ஆன்லைன் அடிமைகளாக்கும் கூகுள், ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வரி!

உலகளவில் ஹிட்டாகி ஜனங்களை ஆன் லைன் அடிமையாக்கி ஏகப்பட்ட வருமானம் கல்லா கட்டும் எக்கச்சக்கமான பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இணையம் சார் நிறுவனங்கள், (இந்திய) உள்நாட்டு அளவில் கணிசமான அளவில் வருவாயை ஈட்டுகின்றன. இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களிடம் விளம்பரம் செய்கின்றன. ஆனால், அந்த அளவுக்கேற்ப கட்ட வேண்டிய வரியைவிடக் குறைவாகவே செலுத்துகின்றன. இந்நிலையில் ஆன் லைன் வணிகத்தை விஸ்தரித்துக் கொண்டே போகும் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பன்னாட்டு நிறுவனங் களுக்குக் கிடுக்கிப்பிடி போடும் வகையில் புதிய வரியை விதிக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. விரைவில், இது தொடர்பான சட்டவரைவு நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்.. மொபைல் யுகமாகி விட்ட நம்ம இந்தியாவில் கூகிள், பேஸ்புக், ட்விட்டர், ஹலோ போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்க அரசு தயாராகி வருகிறது. இதன்மூலம் அரசு ரூ.20 கோடி வருவாய் ஈட்டவும், வரி வசூலிப்பதில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரரை உருவாக்கவும் முடியும்.விஸ்வரூபம் எடுத்து விட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்து விவாதிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் எஸ்ஈபி (Significant Economic Presence) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் என்ற திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் ஒரு நிறுவனம் இந்தியாவில் லாபம் ஈட்டினால், அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த அடிப்படையின் கீழ், நாட்டில் வருவாய் ஈட்டும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. உலகின் பிற நாடுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்களும் நடந்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் (EU) 3 சதவீத வீதத்தில் வரி விதிக்க பரிசீலித்து வருகிறது.

இந்த விதிகள் உறுதிசெய்யப்பட்டால், வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங் களைப் போல 30 சதவீத விகிதத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும். வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள், நமது நாட்டின் உள்நாட்டு நிறுவனங்களை போலவே விளம்பரங்களிலிருந்து பணம் சம்பாதிக்கின்றன.

அதாவது கூகுள், பேஸ்புக், ட்விட்டர் (ட்விட்டர்) போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களுக்கு பில்லிங் செய்கின்றன. ஆனால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி சொந்த நாட்டுக்கு வரியாகவும் அல்லது அதன் சொந்த நிறுவனங்களுக்கு பயன்படுத்துகிறது. ஆனால் நமது நாட்டுக்கு எந்தவித பயன் கிடைப்பது இல்லை. எனவே தான் வருமான வரித் துறை டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக வரி வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம் வகுத்து வருகிறது என்று தன்னிலை விளக்க்கம் அளித்துள்ளது.