சர்வதேச அளவில் நான்காவது வலிமையான ராணுவம்: நம்ம இந்தியா!

சர்வதேச அளவில் நான்காவது வலிமையான ராணுவம்: நம்ம இந்தியா!

உலகிலேயே அதிக அளவு ராணுவ சாதனங்களை இறக்குமதி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா என்பதை மாற்றி, 2011 முதல் இந்தியா அந்த இடத்தைப் பிடித்துவிட்டது. ஆனால், சீனாவைவிட நாம் அதிகமாக வாங்குகிறோமா? இல்லை, சீனா பெரும்பாலானவற்றை இப்போது உள்நாட்டிலேயே தயாரித்துக்கொள்வதுடன் பிற நாடுகளுக்கும் விற்கத் தொடங்கிவிட்டது. நாம் நம்முடைய தேவைக்கே வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம் என்று அண்மையில் ஓர் தகவல் வெளியான நிலையில்  சர்வதே அளவில் வலிமையான ராணுவங்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 4-வது இடம்பெற்றுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடம் பெற்றுள்ளது.

2017-ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலை குளோபல் ஃபயர் பவர் (ஜிபிஎப்) அமைப்பு வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 133 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 4-வது இடம் பெற்றுள்ளது. முதல் 10 நாடுகள் பட்டியலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பெற்றுள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தை பெற்றுள்ளது.

ரஷ்யாவுக்கு அடுத்து சீனா மூன்றாவது இடத்தை பெற்றிருந்தாலும் விரைவில் அது இரண்டாமித்தை பெறவுள்ளது. ரஷ்யாவை விட சீனாவிடம் போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் கூடுதலாக உள்ளன. என்றாலும் பீரங்கிகளின் எண்ணிக்கையில் ரஷ்யாவை விட மிகவும் பின்தங்கியுள்ளது.

ராணுவ பலம், படை வீரர்களின் எண்ணிக்கை, பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவியியல் அம்சங்கள் உள்ளிட்ட 50 அலகுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சீனாவும் இந்தியாவும் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்க படை வீரர்களின் எண்ணிக்கை முக்கிய காரணமாக இருந்தது.

இந்த ஆய்வில் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை என்றாலும் அணு ஆயுதத் திறனுக்கு புள்ளிகள் தரப்பட்டன. பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டை விட சீனாவின் ஒதுக்கீடு 3 மடங்குக்கும் அதிகமாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!