ஜெர்மன் மியூசித்தில் கொள்ளை: துப்பு கொடுத்தால் ரூ 3.94 கோடி பரிசு! – AanthaiReporter.Com

ஜெர்மன் மியூசித்தில் கொள்ளை: துப்பு கொடுத்தால் ரூ 3.94 கோடி பரிசு!

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல்கள் தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 3.94 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியான சாக்சனி மாகாணத்தின் தலைநகரான டிரஸ்டனில், கிரீன் வாலட் , என்னும் அருங்காட்சியகம் இருக்கின்றது. உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள் அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நேற்று முன் தினம் முகமூடி கொள்ளையர்கள் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்துக்கொண்டு நுழைந்தனர். அவர்கள் பழங்கால நகைகள் இருந்த அறைக்குள் வைக்கப்பட்டு இருந்த நகை பெட்டியை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட, நகை பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள் போன்ற விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அருங்காட்சியகத்தில் இருக்கின்ற கண்காணிப்பு கேமராவில், கொள்ளையர்களின் உருவமானது பதிவாகி இருக்கின்றது என்றும், அதை அடிப்படையாக வைத்து தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், அருங்காட்சியக திருட்டு சம்பவம் குறித்து தகவல் தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 3 கோடியே 94 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என ஜெர்மனி காவல்துறை அறிவித்துள்ளது.