ஜெனிவா கன்வென்ஷன் – 2 அனா பதிவு.! – AanthaiReporter.Com

ஜெனிவா கன்வென்ஷன் – 2 அனா பதிவு.!

ஜெனிவா என்பது ஒரு தனி நாடாகவே இருந்தது 18ஆம் நூற்றாண்டு வரை. இங்குள்ள மக்கள் பிரஞ்சு தான் பேசுவார் கள். ஆனால் இப்போது சுவிச்சர்லாந்தின் இரண்டாம் பெரிய நகரம் (ஜூரிச்சுக்கு அடுத்து) ஜெனிவா தான். சுவிச்சர் லாந்து மக்கள் ஜெர்மன் மொழியை தான் பேசுபவர்கள் என்றாலும் இன்னும் இந்த நகரத்தில் பிரஞ்சு மொழியை மிக தாராளமாக பேசும் நகரம். ஜெனிவா கன்வென்ஷன் என்றால் என்ன அது எப்படி இந்த நகரத்துக்கு பெயர் வந்தது என்றால் – உலகில் ஐந்து தலைமை நிலையங்களை கொண்ட ஐ நா சபை இங்கும் ஒன்றை கொண்டுள்ளது. இந்த ஜெனிவா நக்ரத்தில் ஐ நா இயங்குவதால் 1929 ஆம் ஆண்டு சட்டம் ஏற்றினாலும் ரெட் கிராஸ் பரிந்துரைப்படி prisoner of war (POW) 1949 முதல் தான் நடைமுறைக்கு வந்தது. அப்போது இரண்டாம் உலக போரின் உச்சகட்டம்.

ஆனால் நான்கு ஜெனிவா கன்வென்ஷன் உள்ளது அதில் மூன்றாவது கன்வென்ஷனில் இயற்றபட்ட தீர்மானம் தான் இந்த prisoner of war (POW). அதாவது போர் புரியும் போது அந்நிய படைகள் நம் நாட்டினுள் புகுந்து கைபற்றினால், அல்லது வெளி நாட்டில் உள்ள இடங்களில் போர் புரியும் போது கைது செய்யபட்டாலோ இந்த prisoner of war (POW) செல்லும்.

இதன் சாராம்சம்……. கைது செய்த ராணுவ, வீரரை மனதளவில் அல்லது உடலளவில் துன்புறுத்த கூடாது. அவரை அவுட்ரேஜ் செய்யவோ அல்லது செய்யப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிடக்கூடாது. போர் முடியும் கண்ணியமாக வைத்திருந்து போர் முடிந்த உடன் அந்த நாட்டின் கமாண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவரை prisoner of war (POW) என்னும் சிறையில் தான் அடைக்க முடியும்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் கார்கில் போரில் 26 வயது நச்சிகேட்டாவை பிடித்து மனதளவிலும் – உடலளவிலும் துன்புறுத்தி பின்பு விடுவிக்கப்பட்டார். அவரை தேடி சென்ற ஸ்குவாடுரான் லீடர் அஜய் அஹூஜா வை வானிலே சுட்டு கொன்றது பாகிஸ்தான் ராணுவம். அதே சமயத்தில் Captain Saurabh Kalia and five other soldiers – Sepoys Arjun Ram, Bhanwar Lal Bagaria, Bhika Ram, Moola Ram and Naresh Singh போன்றவர்களை கொடுமைப்படுத்தி அவர்களின் பிணங்களை சின்னாபின்னப்படுத்தி திருப்பி பெட்டியில் வைத்து கொடுத்ததும் இந்த பாகிஸ்தான் ராணுவம் தான்.

அதே சமயம் நம் இந்தியாவில் நுழைந்து உயிரை மாய்த்த பாகிஸ்தான் வீரர்களின் உடலை நம் ஒப்படைத்த போது பாகிஸ்தான் வாங்க மறுத்த நிலையில் நாம் அவர்களின் பிணங்களை இந்திய மண்ணில் பாகிஸ்தான் கொடி போர்த்தி அவர்களின் மதக் கோட்பாடு படி இறுதி மரியாதை செய்த உண்மையான வல்லரசு இந்தியா என்பதில் சந்தேகமே இல்லை. இன்று இம்ரான் கான் இந்திய பிரதமரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நாளை விங் கமான்டர் அபி நந்தனை லாகூர் வழி தரை மார்க்கமாக இந்தியாவில் ஒப்படைப்பார்(கள்) என்று நம்புவோம்..

ஜெய் ஹிந்த்.