கங்கை நதிப் பிரச்னைக்காக உண்ணாவிரதமிருந்த சமூக ஆர்வலர் மரணம்!

கங்கை நதிப் பிரச்னைக்காக உண்ணாவிரதமிருந்த சமூக ஆர்வலர்  மரணம்!

2011-ம் ஆண்டில் கங்கை நதியின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக் கையுடன், சுவாமி நிகமானந்த் என்பவர் 2 மாதமாக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததைப் போல் அதே கோரிக்கையுடன் 114 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த முன்னாள் ஐஐடி பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் இன்று உயிரிழந்தார்.

கான்பூரில் உள்ள தொழில் நுட்ப கல்வி மையத்தில் பேராசிரியராக ஜி டி அகர்வால் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பேராசிரியராக பணி புரிந்த போது தேசிய கங்கை நதி நீர் ஆணையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிலும் கௌரவ செயலராக இருந்து வந்தார்.

பின்னர்  அகர்வால் தனது பெயரை சுவாமி கியான் சுவ்ரூப் சனந்த் என மாற்றிக் கொண்டு ஆன்மிக பணிகள் செய்ய ஆரம்பித்தார். இதனிடையே நீண்டா நாள் கோரிக்கை கங்கை நதியை தூய்மை படுத்த வேண்டும் என்பதாகும். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி அகர்வால் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் ஹரித்வார் நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவரது முக்கிய கோரிக்கைகள் ஹரித்வார் நகரில் இருந்து கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதும் அந்த நதியில் அமைக்கப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் மர்றும் சுரங்கப் பணிகளை கைவிட வேண்டும் என்பதாகும். இதன் பொருட்டு தண்ணீர் மற்றும் தேன் மட்டுமே அருந்தி இவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் இவரது எடை மள மள வென குறைந்தது.

அகர்வாலுக்கு உண்ணாவிரதம் காரணமாக உடல்ரீதியாக பல பிரச்னைகள் ஏற்பட்டன. அவரது போராட்டம் 110 நாளை எட்டியதால் உடல் நிலை கடுமையாக மோசம் அடைந்தது. அதை ஒட்டி அவர் வலுக்கட்டாயமாக ஆசிரமத்தில் இருந்து தூக்கி வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பிற்பகலில் ஞானஸ்வரூப் சனந்த் உயிரிழந்தார். அவர் மரணம் நாடெங்கும் உள்ள ஆர்வலர்கள் இடையில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Related Posts

error: Content is protected !!