காந்தி ஜெயந்தி: தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை! – AanthaiReporter.Com

காந்தி ஜெயந்தி: தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி பிரதமர் மோடி, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி அடிகளின் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் கவர்னர் பன்வாரில் லால் ரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் மற்றும் அமைச்சர்கள் காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் காந்தி சிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் சென்னை ராஜ் பவனில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.தொடர்ந்து தூய்மை குறித்த உறுதிமொழியை கவர்னர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் ஆளுநர் மாளிகையில் மாணவர்களுடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.