ட்விட்டர் ஊழியர்கள் தயவுடன் பயனர்கள் கணக்கு அபேஸ்! – AanthaiReporter.Com

ட்விட்டர் ஊழியர்கள் தயவுடன் பயனர்கள் கணக்கு அபேஸ்!

இப்பொதெல்லாம் போன் – அதுவும் ஹைடெக் போன் வைத்திருப்போர் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அப்படி போன் வைத்திருப்பவர்களில் பலரும் ஃபேஸ் புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி அப்டேட் செய்வது வாடிக்கை. அப்படி தொடங்கப்படும் அல்லது தொடங்கப்பட்ட எல்லார் கணக்கு விபரங்களும் ரகசியமாக பாதுக்கத்து வருகிறோம் என்று கம்பெனிகள் / நிறுவங்கள் சொல்வதும், ஆனாலும் தனி நபர் தகவல் திருட்டு போய் விட்டது என்று செய்தி வருவதும் வழக்கமாகி விட்டது. அந்த வகையில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

அதிலும் கடந்த 2015ம் ஆண்டு 6,000 ட்விட்டர் பயனர்கள் குறித்து சவூதி அரேபியாவிற்கு உளவு தெரிவித்ததாக ட்விட்டரின் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த அலி அல்சபரா, அகமத் அபவும்மோ ஆகியோர் சவூதி அரச குடும்பத்தில் பணிபுரிந்த அகமத் அல்முத் தேய்ரி என்பவருடன் இணைந்து பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இரு ட்விட்டர் ஊழியருக்கும் சவூதி அதிகாரி களுக்கும் இடையிலான இடைத் தரகராக அல்முத்தேய்ரி செய்யப்பட்டு வந்துள்ளார். அமெரிக்கா வுக்குள் சவுதியை சேர்ந்தவர்கள் மீது உளவுக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி 6,000 பயனர்களின் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் ஆகியவை கசிந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இவர்கள் அனைவரும் சவுதி அரேபிய அரசு குறித்து தொடர் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் ஆவர். இது தொடர்பாக வாஷிங்டனில் வசித்து வந்த அகமத் அபவும்மோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எப்.பி.ஐ உளவுப் பிரிவுக்கு பொய்யான அறிக்கை மற்றும் ஆவணங் களை வழங்கியதாகவும் அபவும்மோ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ட்விட்டரில் ஊடக கூட்டு முகாமையாளராக பதவி வகித்த இவர் 2015 இல் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மற்ற இருவரும் சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை சவுதி அரேபியாவிற்கு வழங்கிய ஊழியர்களுக்கு அந்நாட்டு அரசு பரிசுத்தொகை வழங்கியதாக அமெரிக்கா அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்டுபிடித்த எப்.பி.ஐ-க்கு நன்றி தெரிவித்துள்ள ட்விட்டர் நிர்வாகம் வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளது.