இந்தியன் ஃபுட் கார்பரேஷனில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

இந்தியன் ஃபுட் கார்பரேஷனில் ஜாப் ரெடி!

இந்திய உணவு கழகத்தில் (எப்.சி.ஐ.,) ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்), ஸ்டெனோ கிரேடு ii, டைப்பிஸ்ட் (ஹிந்தி), அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் 585 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்

மொத்த காலியிடங்களில் மண்டலம் வாரியாக வடக்கு 285, தெற்கு 79, மேற்கு 105, கிழக்கு 77, வடகிழக்கு 39 என 585 இடங்கள் உள்ளன.

வயது

2019 ஆக., 1 அடிப்படையில் அதிகபட்ச வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி

ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் பதவிக்கு பி.காம்., முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு கல்வித்தகுதி மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்ச்சி முறை

இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு மையம்

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலுார், ஈரோடு மற்றும் நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் (28.2.2020 முதல் 30.3.2020 வரை). ஏதாவது ஒரு மண்டலத்துக்கு, ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ. 500 (எஸ்.சி., / எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை).

கடைசி தேதி

30.3.2020

விபரங்களுக்கு

ஆந்தை புட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு