கட்டைவிரல் மூலம் பண பரிவர்த்தனை ! – மோடி தகவல்

கட்டைவிரல் மூலம் பண பரிவர்த்தனை ! – மோடி தகவல்
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற டிஜி ஜன் தன் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர்மோடி பேசினார். இதில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
finger dec 30
* டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வோருக்கு  அடுத்த 100 நாட்களுக்கு தினமும் ரூ. ஆயிரம்  பரிசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
* 2 வாரங்களில் கைரேகையில் பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
*பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு புதிய திட்டம் வரப்பிரசாதம்.
*பீம் என்ற பெயரில் ஈ வாலட் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
*அம்பேத்காரை கவுரவிக்கும் வகையில் இந்த திட்டத்திற்கு பீம் என பெயரிடப்பட்டுள்ளது.
*ஏழைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் திட்டம் என்பதால் இத்திட்டத்திற்கு அம்பேத்கார் பெயர்,
*காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரிக்க டிஜிட்டல் முறை இல்லாததே காரணம்
*அடுத்துவரும் நாட்களில் நாட்டுக்கு நல்லது அளிக்கும் பல திட்டங்களை அறிமுகப்படுத்துவேன்.
*புத்தண்டு முதல் பீம் செயலி இல்லாதவர்களுக்கு சமூகம் மதிப்பு அளிக்காது.
*நம் நாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு முறையை பார்த்து பிற நாடுகள் ஆச்சர்யபப்டுகின்றன.
*மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் கரணமாக தேர்தல் நடத்துவதில் இந்தியா புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
*முன்னேறிய நாடுகளில் கூட வாக்குப்பதிவுக்கு பேப்பர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
*மின்னணு பரிவர்த்தனைகளை ஆதாரமாக கொண்டு வங்கிகளில் கடன் பெறலாம்.
*ஏழைகளின் மீது தனக்கு அக்கறை இருப்பதால் இறைவன் துணை எப்போதும் இருக்கும்.
*அடுத்த 2 வாரத்திற்குள் புதிய திட்டம் ஒன்றை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.
*பணப்பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
*உலகின் மிகப்பெரிய உன்னத திட்டமாக பீம் திட்டம் பார்க்கப்படும்.
* டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
*ஏழை மக்கள் பயன் அடையும் வகையில் மின்னனு பரிவர்த்தனைக்கான  கட்டணம் குறைப்பு.
*ஆதார் எண்ணைக்கொண்டு கட்டைவிரல் மூலம் பரிவர்த்தனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
*100 கோடி பேருக்கும் அதிகமானோர் ஆதார் எண்ணை பெற்றுள்ளனர்.
*பங்குச்சந்தை நடவடிக்கைகளில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி நடைபெற்றுள்ளது.
*பீம் என்ற செயலி மூலம் ஒட்டு மொத்த வர்த்தகமும் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
*இணையதள சேவை இல்லையென்றாலும் டிஜிட்டல் வர்த்தகம் சாத்தியமாகும்.
*பீம் செயலி மின்னணு வங்கி பரிமாற்றத்தை அதிகரிக்க உதவும்
*டிஜிட்டல் தொழிலுநுட்பத்தின் மூலம் ரொக்கம்ற்ற பரிவர்த்தனை அதிகரிக்க வேண்டும்
*இதுவரை கற்பனை கூட செய்து பார்த்திராத பலன்களை சிறுவணிகர்கள் அடைய முடியும்.
*எவ்வளவு செய்தாலும் சிலரை திருப்தி செய்ய முடியாது
*சில மாமனிதர்கள் இந்த தொழில்நுட்ப புரட்சியில் நம்பிக்கையின்றி பேசி வருகின்றன.
*நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நான் எதையும் செய்ய முடியாது.
*ஊழல்வாதிகள் எலிகளை போல் நாட்டைச்சுரண்டி வருகின்றனர்
*தொழில் நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்வதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பறியது
இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts

error: Content is protected !!