மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஹைலைட்ஸ்!.. – AanthaiReporter.Com

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஹைலைட்ஸ்!..

பாராளுமன்ற தேர்தலையொட்டி 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயலால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நடந்து முடிந்து, பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி  அமைச்சராக  நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். பதவி ஏற்ற சூட்டோடு சூடாக அவர் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். அதன் பணிகள் முடிவடைந்து இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் ஆவணங்களை ஒரு சூட்கேஸ் பெட்டியில் எடுத்துச் செல்லும் நிதி அமைச்சர்கள் மத்தி யில், நிர்மலா சீதாராமன், ஒரு பெண்ணுக்கே உரிய கலை அழகு மிளிர, பெட்டிக்கு பை சொல்லி விட்டு, இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப் பட்ட ஒரு பையை கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சாராம்சம் இதோ::

புதிய இந்தியாவை உருவாக்க இந்த புதிய அரசு பதவி ஏற்றுள்ளது

வரலாற்றிலேயே அதிகமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானது

இளம் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்

தேசத்திற்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்

தேசப்பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்கிற எண்ணத்தில் மக்கள் தீர்ப்பளித்தனர்

கடந்த அரசில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி புதிய இந்தியாவிற்கு அடித்தளமிட்டது

சீரமைப்பு, செயல்பாடு மற்றும் மாற்றம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது

தேசத்தை மத்திய அரசு வழிநடத்திச் செல்வதை மக்கள் அங்கீகரித்துள்ளனர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது

இந்தியாவின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது என்பது சாத்தியமானது

1.8 லட்சம் கோடி டாலர் என்கிற மதிப்பில் இருந்து 2.7 லட்சம் கோடி டாலாராக இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படும்

உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தற்போது திகழ்ந்து வருகிறது

வளர்ச்சியை உறுதிப்படுத்த சீரமைப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டியுள்ளது

3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் முதலீடு அதிகப்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்

சாமான்ய மக்களின் நலனை கருத்தில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் சாமான்ய மனிதனின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது

தொழில்துறை சார்ந்த கொள்கை முடிவுகள் உடனுக்கு உடன் எடுக்கப்படுகின்றன

சாலை போக்குவரத்தை மேம்படுத்துவது என்பது வளர்ச்சிக்கு மிக அடிப்படையான ஒரு அம்சம்

சாலை போக்குவரத்தை போலவே உள் நாட்டு நீர் வழிப்போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்

உடான் திட்டம் மூலமாக சிறிய நகரங்களும் விமான சேவையை பெற்று வருகின்றன

போக்குவரத்தை மேம்படுத்தியன் மூலம் கிராம மற்றும் நகரங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைத்துள்ளோம்

விமான போக்குவரத்து துறையில் இந்தியா முதலீடு செய்யும்

300 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தற்போது 657 கி.மீ தொலைவு மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன

விமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மூன்று ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் மானியம் வழங்கப்படும்

சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்

நாடு முழுவதும் பயணம் செய்ய ஒருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்

கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை நான்கு மடங்கு அதிகமாக்க நடவடிக்கை

ஒரே நாடு ஒரே மின்தடம் எனும் திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கான மின் விநியோகத்தை வேகப்படுத்த முடியும்

அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட்டு ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள நடவடிக்கை

அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் வீடு என்பது தான் மத்திய அரசின் தாரக மந்திரம்
முதலீடுகள்

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு நடப்பாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு

வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்

நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது

வருடத்திற்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் மேற்கொள்ளும் வணிகர்கள் 3 கோடி பேருக்கு ஓய்வூதிய திட்டம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களுக்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கும் திட்டம்

வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இந்தியாவிற்கு கிடைத்து வருகிறது
காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்

துடிப்பான குஜராத் எனும் தொழில் வளர்ச்சி திட்டம் நாடு முழுமைக்கும் முன்னோடியாக கொள்ளப்படும்

நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களை தொடங்க உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்படும்

இந்தியா விண்வெளித்துறையில் மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது

விண்வெளி வாய்ப்புகளை வர்த்தக ரீதியில் பயன்படுத்திக் கொள்ள இந்தியா முன்னுரிமை கொடுக்கும்

விண்வெளி வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் செயல்படும் புதிய நிறுவனம் உருவாக்கப்படும்

2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் எல்பிஜி கேஸ் இணைப்பு பெற்று இருக்கும்

நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்

2022க்குள் இந்தியாவில் மின்சார இணைப்பு இல்லாத வீடே இல்லை என்கிற நிலை ஏற்படும்

பொருளாதார மேம்பாட்டிற்கு மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை மிகவும் அவசியம்

அடுத்த 5 ஆண்டுகளில் 1,25,000 கி.மீ தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்படும் – மேம்படுத்தப்படும் ரூ.80,250 கோடி செலவில் 1,25,000 கிமீ சாலைகள் 5 ஆண்டுகளில் அமைக்கப்படும்-மேம்படுத்தப் படும்

நாடு முழுவதும் 75 ஆயிரம் பேரை தேர்வு செய்து தொழில் முனைவோராக்கும் பயிற்சி வழங்கப்படும்

வேளாண்மைத்துறையிலும் தனியார் முதலீட்டை பெற நடவடிக்கை எடுக்கப்படும்

நாடு முழுவதும் விவசாயம் தொடர்புடைய 10 ஆயிரம் நிறுவனங்கள் உருவாக்கப்படும்

விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை வர்த்தகம் செய்யும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும்

புதிய விவசாய புரட்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்

குடிநீர் பிரச்சனை இருக்கவே கூடாது என்பது மத்திய அரசின் பிரதான நோக்கம்

மழை நீர் சேகரிப்பு திட்டம், நிலத்தடி நீரை உயர்த்தும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்

நீர் மேலாண்மையை சரி செய்ய நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் நடத்தப்படும்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர் சக்தி துறை அமைச்சகம் நீர் மேலாண்மையை மேற்கொள்ளும்

ஊரக பகுதி மக்களுக்கும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய திட்டங்கள் வகுக்கப்படும்

9.6 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன

திறந்தவெளி கழிப்பறை இல்லாத கிராமங்களாக சுமார் 5.6 லட்சம் கிராமங்கள் மாறியுள்ளன

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 81 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 26 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன

நாடு முழுவதும் 95 சதவீத நகரங்கள், கிராமங்கள் திறந்த வெளி கழிவறைகள் இல்லாத நிலையை எட்டியுள்ளன

வரும் அக்டோபர் மாதம் காந்தி பிறந்த தினத்தில் திறந்தவெளி கழிவறைகள் இல்லாத நாடாக இந்தியா இருக்கும்

புறநகர் ரயில்களின் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தனியார் – பொதுத்துறை கூட்டமைப்பில் மெட்ரோ திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும்

சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை உயர் கல்வித்துறையில் கொள்கை

நாடு தழுவிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன
இந்தியாவில் கல்வி கற்றுக் கொள்ளுங்கள் எனும் இயக்கம் ஊக்கப்படுத்தப்படும்

சுமார் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்

சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்

சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்க தேசிய விளையாட்டு ஆணையம்

பலதரப்பட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து சீராக்கும்

புதிதாக உருவாகும் தொழில் நிறுவனங்களுக்கு என்று பிரத்யேகமாக தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்

3டி, செயற்கை அறிவு உள்ளிட்ட துறைகளில் இந்திய இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்ட பிரத்யேக தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படும்

சாக்கடை கழிவுகளை அகற்ற ரேபோக்கள் மற்றும் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரம் ஓய்வூதியம்

ரயில்நிலையங்களை நவீனப்படுத்தும் பிரத்யேக திட்டம் இந்த ஆண்டு துவங்கப்படும்

5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை 

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் நிதிக்கு இனி விசாரணை இல்லை