ஃபேஸ் புக்கை மேலும் விரிவுப்படுத்த உதவும் ஆளில்லா விமானம் ரெடி!

ஃபேஸ் புக்கை மேலும் விரிவுப்படுத்த உதவும் ஆளில்லா விமானம் ரெடி!

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொலைதூர கிராமங்களுக்கு பிராட்பேண்ட் மூலம் இண்டர்நெட் வசதியை கொண்டு செல்வது தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகவும் சிக்கலாகவும், சவாலாகவும் உள்ள நிலையில் ஆளில்லா விமானத்தின் மூலம் வயர்லெஸ் சேவையை வழங்கி சாத்தியபடுத்த முயற்சித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

ravinag jy 25

2 ஆண்டுகளுக்கு முன்பே, அதற்கென ஒரு தனி ஆய்வுக்கூடத்தை நிறுவிய பேஸ்புக் நிறுவனம் பல தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய “அக்கீலா” எனப்படும் ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது. அதிநவீன தொழிநுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் ஒரு காரைவிட குறைவான எடை கொண்டது.

இதுவரை உருவாக்கப்பட்ட சூரிய ஒளி மூலம் இயங்கும் விமானங்கள் அதிகபட்சம் 14 நாட்களே தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவையாகும் ஆனால் ஆளில்லாமல் இயங்கக்கூடிய இந்த அக்வல்லா விமானமோ தொடர்ந்து 3 மாதங்கள் வரை ஆகாயத்தில் பறந்து கொண்டே மக்களுக்கு தன் இணைய சேவையை கொடுக்கும் திறன் கொண்டதாகும்

இரண்டு வருட முயற்சியின் பலனால் உருவான அக்கீலா செயற்கை விமானத்தை ஃபேஸ்புக் போன வாரம் 90 நிமிடங்கள் வானில் செலுத்தி சோதனை செய்தது. இதன் மூலம் இணையய வசதி இல்லாத மக்களுக்கு இலவசமாக இணையத்தை தரும். ஆனால் இது ட்ரோன் போல அல்ல அல்ல.. அல்ல என்பதை தெரிஞ்சுக்கணும்- நார்மல் விமானம் – அதுவும் மிக பெரிய விமானமாக்கும்.

அதே சமயம் இந்த விமானத்தை இயக்க மற்றும் இன்டர் நெட் ட்ரான்ஸ்பான்டரை இயக்க வெறும் 5000 வாட்ஸ் தான் தேவை. அதையும் கூட இது சூரிய சக்தி மூலம் பெறும். அப்படி ஒரு வேளை சூரிய ஒளியே இல்லாமல் போனாலும் இதனுள் இருக்கும் எரி பொருள் அடுத்த சூரிய ஒளி கிடைக்கும் வரை இயங்கும் அளவுக்கு உள்ளே சேமித்து வைத்திருக்கும் இந்த விமானம்.

மேலும் இந்த விமானம் 60,000 அடி உயரத்தில் பறந்து சுமார் 100 கிலோமீட்டர் சுற்று அளவுக்கு இதன் இனையம் பரவி கிடைக்கும். இது வழக்கமான பிராட்பேன்ட் அல்லது நேரோபேன்ட் அல்லாத மில்லிமீட்டர் வேவ் ஸிஸ்டம்ஸ் மற்றும் லேஸர் கம்யூனிகேஷன்கள் மூலம் மிக துள்ளியமாக இதன் சிக்னல்கள் பூமியில் கிடைக்க பெறும்…..

Facebook’s First Step To Connect Billions Of People Through Aquila Flight………….!

https://www.youtube.com/watch?v=eOez_Hk80TI

error: Content is protected !!