ஆந்திராவில் உருவாகிறது உதாரண பல்கலைக்கழகம் – கிரியா யுனிவர்சிட்டி! – – AanthaiReporter.Com

ஆந்திராவில் உருவாகிறது உதாரண பல்கலைக்கழகம் – கிரியா யுனிவர்சிட்டி! –

நம் இந்தியாவில் உள்ள 819 பல்கலைக்கழகங்கள் பொறியியல் கல்லூரிகள், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆனாலும் மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கிறது. பெரும்பாலான கல்லூரிகளில் தரமற்ற கல்வி தான் நம்நாட்டில் தரப்படுகிறது. இது அரசுக்கும், கல்வியாளர்களுக்கும் நன்றாக தெரியும்.அது குறித்து எபோதாவது ஏதாவது கவலைப்படுவது பேசுவதும் வாடிக்கைதான். ஆனால மாற்றம் கொட்ண்டு வர மட்டும் முயற்சிப்பதே இல்லை. இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு கல்வியாளர், ‘நம் நாட்டில் கல்வி பெற்று வெளிநாட்டில் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கின்றனர். அதே நேரம் இந்தியாவில் பணியாற்ற முன்வரவில்லை. நாட்டில் படித்தவர்களிடம் இருக்கும் மனநிலைமாற வேண்டும். உயர்கல்வி பெற்ற மாணவர்களிடம் கூட ஆங்கிலம் உட்பட பிற மொழி பேச்சுத்திறன் குறைவாகவே உள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் சகஜமாக அனைத்து மொழிகளிலும் பேசுகின்றனர். நாட்டில் கல்வியின் தரம் உயர வேண்டுமானால் தரம்வாய்ந்த ஆசிரியர்கள், வசதிகளை கொண்டு தரமான கல்வி நிலையங்களை உருவாக்கவேண்டும். அப்போது தான் நாடு கல்வியில் முழுமையான வளர்ச்சி பெறும்’ என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆந்திராவில் உதாரண பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கிறது.

dgree mar 25

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்  சில ‘கார்ப்பரேட்’ நிறுவன அதிபர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து ஆந்திராவில் இந்த உதாரண பல்கலைக்கழகம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆம்.. நம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், இண்டஸ் இண்ட் வங்கியின் தலைவர், சேஷசாயி, மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா உட்பட பல கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் இணைந்து ’கிரியா பல்கலைக் கழகம்’ என்ற கல்வி நிறுவனத்தை துவங்க உள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு ஆலோசகராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்று உள்ளார். இதில், கலை மற்றும் அறிவியல் இளங்கலைப் பாடப்பிரிவுகள் நான்கு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

நம் நாட்டில் தற்போது இருக்கும் பாடதிட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும் இது, ஒட்டு மொத்தமாக உதாரண பல்கலைக்கழகமாக திகழும் என கூறப்படுகிறது. ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி வளாகத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், 750 கோடி ரூபாய் செலவில் இந்த பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது. வரும், 2019 ஜூலை முதல் செயல்படத் துவங்கும் இந்த பல்கலைக்கழகத்துக்கான மாணவர் சேர்க்கை வரும் நவம்பர் மாதம் முதல் துவங்குகிறது. இங்கு பயில தங்கும் வசதியுடன் சேர்த்து 7 – 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிகிறது. ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.