ரேமண்ட்ஸ் (எக்ஸ்) அதிபர் விஜய் சிங்கானியாவுக்கு வந்த சோகம்!

ரேமண்ட்ஸ் (எக்ஸ்) அதிபர் விஜய் சிங்கானியாவுக்கு வந்த சோகம்!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ரேமண்ட்ஸ் நிறுவனம், 1950களில் ஆரம்பிக்கப்பட்டது ரேமண்ட் நிறுவனம். ஆண்களுக்கான பிராண்ட் இது. இதன் துணிகள் மிகவும் தரமாக இருக்கும். இதன் விலையும் கூட மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகமே. தரம் நன்றாக இருந்தாலும் விலை அதிகமாக இருப்பது என்றைக்குமே ரிஸ்க்தான். அதனால் தரமான துணிகளையும் தாண்டி அடுத்த கட்டமாக ஒரு வேலையை செய்தது ரேமண்ட். இதை பயன்படுத்துவர்கள் மீது ஒரு இமேஜை உருவாக்கிறது. . Raymond’s – ‘The Complete Man’ இந்த வாக்கியம் மிக பிரபலம். இந்த துணியை பயன்படுத்துபவர்கள் ஒரு முழுமையான ஆண் என்று சொல்லி விளம்பரபடுத்தியது. அதாவது நல்ல அப்பா, நல்ல மகன், நல்ல கணவன் என்று சொல்லி விளம்பரபடுத்தியது. இந்த ஸ்லோகனை விளம்பரப்படுத்தி பல வருடங்கள் ஆகியும், ஆண்களுக்கான ஆடையில் இந்த நிறுவனம் இன்னும் முன்னணியில் இருக்கிறது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் சுமார் 200 நகரங்களில் சில்லறை விற்பனை கடைகளைக் கொண்டுள்ளது. இதைத் தோற்றுவித்தவர் விஜய்பத் சிங்கானியா. விஜய் சிங்கானியா குடும்பத்திற்கு சொந்தமாக 1960-களில் 14 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக்கட்டிடம் 2007ல் 36 மாடி கொண்டதாக உயர்த்தப்பட்டு மேம்பட்டது. அதன்பிறகு, விஜய்பத் தனது நிறுவனத்தை தனது மகன் கௌதமிடம் ஒப்படைத்துவிட்டார்.

இந்நிலையில், இந்த வீட்டைக் குறித்து குடும்பத்தினருடம் போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஒவ்வொருவருக்கும் சுமார் 5,185 சதுர அடி உடைய வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், இன்று வரை வீடு கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் தன் மகன் தான் என்றும், ரேமண்ட் நிறுவனத்தை தனது தனிப்பட்ட சொத்து போல அவர் நடத்துவதாகவும் கூறி விஜய்பத் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு, ஆகஸ்ட் 22ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. ஒருகாலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த விஜய்பத் தன்னுடைய மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் வாடகை வீட்டில் வசிப்பது பல தரப்பிலும் மனகிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்:

விஜயபத் சிங்கானியாவுக்கு, 1,680 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவருக்கு மதுபதி சிங்கானியா மற்றும் கவுதம் ஹரி சிங்கானியா என, இரு மகன்கள் உள்ளனர். இவர்களில், கவுதம் ஹரி சிங்கானியா, ரேமண்ட் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். மதுபதி – அனுராதா சிங்கானியா தம்பதியருக்கு, மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பரம்பரை சொத்தின் மீதான உரிமையை விட்டுவிட்டு, மதுபதி – அனுராதா தம்பதி மற்றும் அவர்களது குழந்தைகள், மும்பையை விட்டு வெளியேற வேண்டும். இதற்கு பதிலாக, சொத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்குவதாக, 1998 டிச., 30ம் தேதி, ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதையும் தராததால் மும்பை உயர் நீதிமன்றத்தில் மதுபதி – அனுராதா சிங்கானியா தம்பதியரின் குழந்தைகளான, அனன்யா, 29, ரசாலிகா, 26, தாரிணி, 20, மற்றும் ரேவத் ஹரி, 18 நால்வரும், தங்கள் பெற்றோர் சார்பாக வழக்கு தொடர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.:
பரம்பரை சொத்தில், தங்கள் தந்தை மற்றும் தங்களுக்கு உள்ள உரிமைகளை தர வேண்டும் என்றும், நிறுவன பங்குகள் அளிக்க வேண்டும் என்றும், தாத்தா விஜய்பத் சிங்கானியாவுக்கு எதிராக, ஒரு பேரனும் 3 பேத்திகளும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

error: Content is protected !!