குழந்தையின் எதிர்காலம் + திறமைகளை கருவிலேயே மாற்றிக் கொள்ளும் நவீன டெக்னாலஜி ரெடி! – AanthaiReporter.Com

குழந்தையின் எதிர்காலம் + திறமைகளை கருவிலேயே மாற்றிக் கொள்ளும் நவீன டெக்னாலஜி ரெடி!

சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவரின் சாதனை யால் ஒரு குழந்தைக்கு இரண்டு அம்மா, ஒரு அப்பா என மூன்று பேர் பெற்றோர்களாக இருக்கும் நிலை உருவாக்கியதை அந்நாட்டு அரசே அனுமதிக்காமல் முடக்கி வைத்த நிலையில் தற்போது கருவில் இருக்கும் குழந்தையின் டிஎன்ஏ செல்களை மாற்றுவதன் மூலம் , அதன் எதிர்காலத்தை யும், திறமைகளையும் மாற்ற முடியும் என்று அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கலிபோர்னி யாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி என்று டாக்டர்தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளார். 2 வருட தீவிர ஆராய்ச்சிக்கு பின் இப்படி கருவில் மாற்றும் தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.

முற்காலமோ தொடங்கி தற்காலம் வரை தங்கள் குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட்டாக வளர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது. சகலரும் பிரமிக்கும் வகையில் குழந்தையை ஜீனியசாக வளர்ப்பதற்காக பெற்றோர் படும்பாடு இருக்கிறதே. அதை சொல்ல ஆரம்பத்தில் பக்கங்கள் போதாது. அதே சமயம் பெற்றோரின் எண்ணங்களை விட இன்றைய குழந்தைகளின் சிந்தனையும் , போக்கும் படு ஸ்பீட் நாளை ரிலீஸாக இருக்கும் நவீன போன்கள் தொடங்கி ஆன்லைன் தேடல் சகலவற்றிலும் பெற்றோரை விட அதிகம் புரிந்து கொண்டு பயன்படுத்துகின்றனர்.

இதனிடையேதான் குழந்தை கருவில் உருவான உடனே அதன் டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் அதன் குணத்தை மாற்ற முடியும் என்று டாக்டர் ஒருவர் அண்மையில் கண்டறிந்துள்ளார். அதுவும் நமக்கு விருப்பமான அல்லது தேவையான குணத்துடன் புதிதாக கருவை உருவாக்கி, அதை வளர வைக்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளார். எஸ்.. சோதனைக் குழாய் குழந்தையை போலவே இதை உருவாக்கி, பின் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

இதை வைத்து நமக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமோ அப்படி உருவாக்கலாம். உதாரணமாக, கோஹ்லி போல, ரஹ்மான் போல, ஒபாமா போல, ரஜினி போல குழந்தை வேண்டும் என்றால், அது போல டிஎன்ஏ வடிவமைத்து திறமையான நபர்களை உருவாக்கலாம். நாம் கருவில் செய்யும் மாற்றம் வளர வளர வெளிப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் இன்னும் முழுமை யாக வெற்றிபெறவில்லை. இதில் இன்னும் பல சோதனைகள் நடத்த வேண்டி இருக்கிறது. குறைந் தது 5 வருடங்களாவது ஆகும். அதே போல் இதை எல்லா நாடுகளும் அப்படியே ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான நாடுகள் இதற்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

ஆனாலும் இதில் சில பிரச்சனை இருக்கிறது. நாம் உருவாக்கும் குழந்தை முழுக்க முழுக்க அதே குணநலனுடன் இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. அடுத்ததாக இப்படி, மாற்றுவதன் மூலம், அந்த குழந்தைக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனை ஏற்படலாம். உதாரணமாக சிந்திக்கும் திறனில் மாற்றம் ஏற்படலாம், என்று கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க பயன்பாட்டிற்கு வரும்போதுதான் உண்மை தெரியவரும் என்று இப்போதே ஒரு ஸ்பீட் பிரேக்கர் போட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க்து .