ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகல்!

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகல்!

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர்.ஆனால், அதிகமான மக்கள் விலக வேண்டும் என வாக்களித்திருப்பதால் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது உறுதி என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.

britan

இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான நிகல பேரஜ் , ஒரு போரில் வெற்றியடைந்து போன்று உள்ளதாக உணர்கிறேன், இந்த வெற்றியானது உண்மையான மக்கள், சாதாரண மக்கள் மற்றும் ஒழுக்கம் நிறைந்த மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

ஊழல், பொருளாதாரம், அரசியல் பிரச்சனைகள் போன்றவற்றோடு போராடிக்கொண்டிருந்த எங்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துவிட்டதால், இங்கிலாந்து நாடு நேர்மையான பாதையில் பயணிக்கும்.

எவ்வித நாடுகளின் ஆதரவும் இன்றி, தனி நாடாக இருந்து போராடி வெற்றி பெற்றுள்ளோம். ஜூன் 23 ஆம் தேதி தான் இங்கிலாந்து  வரலாற்றில் சுதந்திரம் கிடைத்த நாளாக கொண்டாடப்படவேண்டும் என கூறியுள்ளார்.

இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என இவர  பிரசாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற அச்சத்தால் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 252 புள்ளிகள் குறைந்து 8,018 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது. இதேபோல் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 794 புள்ளிகள் குறைந்து 26,207-ல் வர்த்தகம் நடக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளது.

பிரிட்டன் நாணயமான பவுண்டின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. 9 சதவிதம் சரிவு கண்டுள்ளது.1985-ல் இருந்து முதல்முறையாக பிரிட்டிஷ் நாணயமான பவுண்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறிஉள்ளனர்.
error: Content is protected !!