இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை காலி!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை காலி!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பொதுத்துறை நிறுவனமாகும். சென்னை மற்றும் நாகப்பட்டிணம் பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை ஆய்வு செய்வது மற்றும் பிரித்து எடுக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 56 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ioc may 10

காலியிட விபரம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி சார்ந்த புரொடக்சனில் 22, எலக்ட்ரிகலில் 3, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 2, மெக்கானிக்கலில் 7, பி அண்டு யூ., மெக்கானிக்கலில் 6, ஜூனியர் குவாலிடி கன்ட்ரோல் அனலிஸ்டில் 4, பயர் அண்டு சேப்டி டிரெய்னியில் 4, மார்க்கெட்டிங் அசிஸ் டெண்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர் ஆகியவற்றில் தலா 1, அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஆபிஸ் அசிஸ்டென்டில் தலா 3 இடங்களும் காலியாக உள்ளன.

வயது: 2017 மே 31 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: புரொடக்சன் மற்றும் குவாலிடி கன்ட்ரோல் பிரிவுகளுக்கு பி.எஸ்.சி., படிப்பை வேதியியலில் முடித்தவர்களும், இதர இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பதவிகளுக்கு மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும், மார்க்கெட்டிங் பதவிக்கு பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., படித்தவர்களும்,அக்கவுண்ட்ஸ் பதவிக்கு பி.காம்., படித்தவர்களும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு பட்டப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

கடைசி நாள்: 2017 மே 31.

விபரங்களுக்கு: [email protected]

Related Posts

error: Content is protected !!