இனி இனப்பெருக்கத்திற்கு செக்ஸ் வேண்டாம் – லேப்பில் குழந்தையை வடிவமைத்து கொள்ளலாம்!

இனி இனப்பெருக்கத்திற்கு செக்ஸ் வேண்டாம் – லேப்பில் குழந்தையை வடிவமைத்து கொள்ளலாம்!

காமம் எனப்படும் ‘செக்ஸ்’என்ற செயல்பாடு ஒவ்வொரு உயிரினத்துக்கும் உண்டுதான். ஆனால் மனிதனை மட்டும் இது எம்புட்டு பாடாய் பாடுபடுத்து கிறது என்பதை அன்றாட நாளிதழ்களைப் பார்த்தால் தெரியும். ஆசைக்கு இனங்காத காதலியைக் கொன்ற காதலன். கள்ளக்காதலுக்காக கணவனைக் கொன்ற மனை , சிறுமி கற்பழிப்பு என்று ‘கருவறை’ வரையில் ‘செக்ஸ்’ பரவி எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது. அதிலும் மனிதனை அது மிருகமாக்கு கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இத்தனைக் கும் மிருகங்களும் செக்ஸில் இத்தனை சுகங்களை அனுபவிக்கின்றனவா என்றால்… இல்லை என்பதுதான் பதில். மிருகங்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது வேட்டையாடுதல், உணவருந்துதல், தன் வசிப்பிடத்தைப் பாதுகாத்தல், தன் குட்டிகளைப் பேணுதல் போன்ற ஒரு உந்துதல்தான் – அவ்வளவே.

வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களால் உந்தப்பட்டு எதிர்பாலின விலங்கோடு உறவில் ஈடுபடுவது ஒரு சடங்கு போல் நடை பெறும் விஷயம். மற்றபடி உறவின் போதோ, உறவு முறிந்து பிரியும்போதோ, விலங்குகள் ஒன்றும் பெரிதாக பரவசப்பட்டுக் கொள்வதில்லை. இத்தனைக்கும் பரிணாம வளர்ச்சியில் மனிதனின் முன்னோர்கள் எனப்படும் கொரில்லா, சிம்பன்சி, உராங் உடான் போன்ற குரங்கினங்கள் கூட இனச்சேர்க்கையின்போது சாதாரணமாகத்தான் ஈடுபடுகி ன்றன. ஆக அனைத்து உயிரினங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் கூட செக்ஸில் அதிக இன்பம் காணும் ஒரே மிருகம் மனிதன் மட்டுமே! மிருகங்களின் மூளை மிகச்சிறியது. அதில் பெரும்பகுதி உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. அதை அடக்கியாளும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. எது? எப்போது? எப்படி? தோன்றுகிறதோ அதை! அப்போதே! அப்படியே! செய்துவிடுதல்தான் அதன் சுபாவம். உண ர்ச்சிவசப்படும் தன்மை அதிகம்.

ஆனால் மனிதனின் மூளை இதிலிருந்து மிக வித்தியாசமானது. மனித மூளை மிகப் பெரியது. அதில் பெரும்பகுதி உணர்ச்சிகளை அடக்கி , கட்டுப்படுத்தி, சுயகட்டுப்பாடுடன் சிந்தித்து, சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கக்கூடியது. இந்த முடிவுகளெல்லாம் மனிதனின் முன் மூளையிலேயே தோன்றுகின்றன. வேறு எந்த விலங்குகளுக்கும் இத்தனை நுணுக்கமான முன் மூளை கிடையாது. அதனால் அவை உணவு, உஷ்ணம், உடலு றவு, பாதுகாப்பு என்ற நான்கு தேவைகளைத் தீர்த்துக் கொள்ளவே உயிர்வாழ்கின்றன.மேலும் மனிதனின் தேவை யோ  மிக அதிகம். அவனுக்கும் இந்த அடிப்படைத்தேவைகள் அவசியம். என்றாலும்கூட பல உயரிய தேவைகள் அவனை வழி நடத்துகின்றன. நான் யார்? என் இலக்கு என்ன? என் சாதனை என்ன என்று தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்வதில் சுவாரசியம் அதிகம். ஆராய்ச்சி, பரந்தமனது, கலையார்வம், ரசனை, ஞானம் அறிவுப்பசி, ஆத்ம திருப்தி, படைப்புத்திறன் என்று மனிதனின் முன் மூளையை பேரின்ப விஷயங்களே ஆக்ரமித்தி ருக்கின்றன. அதனால் சிற்றின்ப சங்கதிகளை மூடி மறைத்து கட்டுப்படுத்திக் கொள்கிறான்.

மனைவியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் நினைத்த நேரத்தில் மனிதனால் விலங்குக ளைப்போல உடனடியாக உடலுறவு கொள்ள முடியாது. தனது ஏக்கங்களைத் தீர்த்துக் கொள்ள மனிதனுக்கு தகுந்த சூழல் வாய்க்க வேண்டும். அப்போது தான் எல்லாம் முடியும். நினைத்தபோது ஆசையை தீர்த்துக் கொள்ள முடியாததாலும், மூடி மறைப்பதாலும், காத்திருப்பதாலும், ஏங்குவதாலும் ‘செக்ஸ்’ என்பதற்கு இயற்கையாகவே அதிக கவர்ச்சியும், அதிக சுகமும் சேர்ந்து கொண்டது. ஒரு வேளை விலங்குகளைப்போல மனிதனுக்கும் எல்லாம் உடனே கிடைத்து விட்டால் அவனுக்கு செக்ஸில் இத்தனை சுவாரசியம் ஏற்பட்டிருக்காது என்று கணிப்போருமுண்டு. இந்நிலையில் 30 ஆண்டுகளில் இனபெருக்க செக்ஸ் முடிவுக்கு வரும் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆய்வகங்களில் வடிவமைத்து கொள்வார்கள் என தற்போது நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் சட்டம் மற்றும் உயிர் அறிவியல் துறையின் இயக்குனர் ஹாங்க் கிரேலி இது குறித்து, “ தம்பதிகள் தங்கள் டிஎன்ஏவை வைத்து ஆய்வகங்களில் கருக்களை வடிவமைத்து கொள்வார்கள்.பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்க பயன்படுத்தலாம் பின்னர் இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம். முட்டைகள் பின்னர் பல கருக்களை விளைவிக்கும். பின்னர் அதனை சோதனையிட்டு வல்லுநர்கள் எந்த நோய்களுக்கும் ஆளாகிறார்களா என சோதனை செய்கிறார்கள். இதை செய்வதன் மூலம், பெற்றோர்கள் குழந்தையின் முடி நிறம் மற்றும் கண் வண்ணம் போன்ற அம்சங்களை தேர்ந்து எடுத்து கொள்ள முடியும்.இந்த செயல்முறை தற்போதே சாத்தியம் என்றாலும், 30 ஆண்டுகளில் இது மிகவும் மலிவானதாகவும், நிறைய பேர் இதை செய்ய தயாராக இருப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!