சென்னை மெட்ரோ ரயிலில் ஐஐடி படிப்புடன் பயிற்சி!

சென்னை மெட்ரோ ரயிலில் ஐஐடி படிப்புடன் பயிற்சி!

தமிழகத்தின் தலை நகரான சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கி வருவது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தில் ஐ.ஐ.டி., சென்னையுடன் இணைந்து மெட்ரோ ரயில் தொடர்புடைய முது நிலை டிப்ளமோ படிப்பு வழங்குவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.



காலியிடங்கள்:
 இன்ஜினியரிங் தொடர்பு டைய இந்தப் படிப்பில் மொத்தம் 25 காலியிடங்கள் உள்ளன. இவற்றில் சிவிலில் 16, எலக்ட்ரிகலில் 5, எலக்ட்ரானிக்சில் 3, மெக்கானிக்கலில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 29.5.2019 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வு மதிப்பெண் களும் தேவைப்படும்.

ஸ்டைபண்டு எவ்வளவு ?: இந்த இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.40000/- ஸ்டைபண்டாகப் பெற முடியும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை
: கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 2019 ஜூன் 18.

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!