நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம் – AanthaiReporter.Com

நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

வழி மறித்து பறிக்கும் ரவுடி, தாதா, பேட்டை ரவுடி, மாவட்ட தாதா, மாநில தாதாக்கள் அனைவரையுமே மிஞ்சி விட்டன தேசிய – மாநில அரசியல் கட்சிகள்.இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளிடம். கார்ப்பரேட் கம்பனிகளும் டிரஸ்ட் வைத்து பணத்தை பதுக்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் டிரஸ்ட் வைத்துக்கொண்டு பணத்தை அங்கே கொட்டி மறைத்து வைக்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் அனைத்தும் பணத்தை நன்கொடை என்ற பெயரில் முன்பு கொடுத்தார்கள்.இதற்க்காகவே இந்தியாவில் தேசிய கட்சிகளும், நம் தமிழகத்தில் மாநிலகட்சிகளும் பல இருக்கின்றன. இருப்பினும், புதிது புதிதாகக் கட்சிகள் முளைத்துக் கொண்டேயும் இருக்கின்றன.அரசியலில் விருப்பம் இருப்பவர்களுக்கும் தங்கள் வருமானத்தைக் காக்க நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன என்ற நினைப்பில் செயல்படுபடுவது இங்கு அதிகமாகி விட்டது.இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இவ்வருட பிப்ரவரி மாதம் முதல் டிசம்பர் 15-ம் தேதி வரையில் 225 அரசியல் கட்சிகளை பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியது மற்றும் அங்கீகரிக்கப்படாதவை என அறிவித்து உள்ளது.

election dec 23

அது மட்டுமின்றி இக்கட்சிகளின் நிதி கட்டமைப்பு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (சிபிடிடி) தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் கிடைக்கும் நிதி பங்களிப்பை தவறான முறையில் பயன்படுத்தி இருக்கலாம் என தேர்தல் கண்காணிப்பகம் அச்சம் தெரிவித்து உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடாத இக்கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ததில் சிலகட்சிகள் இனி தொடர்ந்து இயங்கமுடியாது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிதிமுறைகளை அரசியல் கட்சிகள் மீறியிருந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவுகள் 29பி மற்றும் 29சி-யின் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் தேர்தல் ஆணையம் மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் கேட்டுக் கொண்டு உள்ளது.

தேர்தலில் கறுப்பு பணம் பயன்படுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது. அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் அனுப்பியவரின் பெயர் கூறாமல், வருகிற நிதி நன்கொடைகளை பெறுவதற்கு அரசியல் சாசனமோ, பிற சட்டங்களோ எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை. ஆனால், 1951–ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 29 சி, இப்படி வருகிற ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடைகள் குறித்து சுய பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று மட்டுமே கூறி உள்ளது. இந்நிலையில் பெயர் தெரிவிக்காதவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அரசியல் கட்சிகள் பதிவு பெறுவதற்கான உரிமையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் கொண்டு உள்ளது, தேர்தல் சட்டங்களின்படி எந்தஒரு கட்சியையும் பதிவில் இருந்து நீக்குவதற்கு போதுமான அதிகாரம் கிடையாது. இவ்விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரம் பெறுவதற்கான அனுமதியை பெறும் கோரிக்கையானது சட்ட அமைச்சகத்திடம் உள்ளது.இருப்பினும் அரசியலமைப்பின் 324-வது சட்டப்பிரிவின்படி தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், செயலற்று மற்றும் நீண்ட நாட்களாக தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கலாம். 1780-க்கும் மேலான பதிவுப்பெற்ற அரசியல் கட்சிகள் உள்ளன, இதில் அங்கீகரிக்கப்படாதவையும் அடங்கும். பாரதீய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் தேசிய கட்சிகள் ஆகும், மேலும் 58 மாநில கட்சிகள் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யும் நடைமுறைப் பற்றிய ஒரு விளக்க ரிப்போர்ட்:

ஒத்த கருத்துடையவர்கள், அவர்களின் சங்கங்கள் / கழகங்கள் மற்றும் அமைப்புகள் ஒருகட்சியாக உருவெடுக்க வேண்டும் எனில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும்.கட்சியாக விரும்பும் ஒரு குழு,அமைப்பு,கழகம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1988 தொடங்கிய போது நிகழ் நிலையில் இருப்பின், தொடங்கியதில் இருந்து 60 நாட்களுக்குள்ளும், அந்தக் குழு, இந்த மக்கள் பிரதிதித்துவச் சட்டம் இதன் தொடக்கத்திற்கு பின்ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அமைக்கப்பட்ட தேதியின் பின்னிட்டு 30 நாட்களுக்குள் விண்ணப்பம்செய்யப்படுதல் வேண்டும்.அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பித்த கழகத்தின் தலைமைச் செயல் அலுவலர், செயலாளர், கையொப்பமிட வேண்டும், அந்தக் கையெழுத்தானது தேர்தல் ஆணையத்தின் செயலருக்கு முன்நிகழ வேண்டும், அல்லது செயலருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும்.

விண்ணப்பத்தில் கட்சியின் பெயர், அது அமைந்துள்ள மாநிலம், அதற்கான கடிதங்கள் அனுப்பவேண்டிய முகவரி, அதன் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் எண்ணிக்கையளவு, அவர்களில் பிரிவு இருந்தால் அந்தத் தகவல், வட்டார அலகுகள், மக்களவை அல்லது வேறு ஏதேனும் மாநில சட்டமன்றத்தில் சார்பு செய்த உறுப்பினர் உண்டா? ஆம் எனில் அது குறித்ததகவல், அந்த அமைப்பு/கட்சிக்குள் வேறுபட்ட கருத்து தோன்றினால் அதைத் தீர்க்கும் Dispute resolution பற்றிய தகவல்கள் ஏதும், அதன் விதிகளில் பின்னாளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் எனில் அதைக் கொண்டு வரும் முறை பற்றிய தகவல்கள், வேறு கட்சியுடன் இணைக்க விரும்பும் காலத்தில் அதைச் செய்ய வேண்டியமுறை குறித்த விதிகள், இணைப்பது, பிரிவது, கட்சி/அமைப்பை கலைப்பது ஆகியவை ஏற்படுங்கால் அதைச் செய்ய வேண்டிய முறை குறித்த விதிகள் அனைத்தும்…

இவை போக, அந்த கட்சியின் விதிகள், விதிகளின் விவரக் குறிப்புகள், இவை எல்லாம் போக, அந்தக் கழகம்/கட்சி/ அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறது என்றும், சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்க கருத்தும் கொண்டிருக்க வேண்டும். (

பிரிவு5)தேர்தல் ஆணையமானது, தான் பொருத்தமெனக் கருதும், அத்தகைய பிற விவரங்களைக்கழகம்/கட்சி/ அமைப்பிடமிருந்து கேட்டுப் பெறலாம். அத்தோடு, தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் தொகையினை டிமாண்ட் ட்ராஃப்டாகவிண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.இந்த தகவல்கள் எல்லாவற்றையும் பெற்ற பிறகு, தேர்தல் ஆணையம் விணப்பித்த அந்த குழு/அமைப்பு/கழகத்தை கட்சியாக ஏற்பதா வேண்டாமா என்பதைக் குறித்து முடிவு செய்து, பின்னர்அந்த முடிவை, அந்த அமைப்பிற்குத் தகவல் தரும்.அந்த அமைப்பு, பிரிவு 5-ல் குறிப்பிட்ட காப்புரைகளுக்கு அனுசரித்திருக்க வேண்டும் என்பதேமுக்கியமாக கவனிக்கப்படும்.இது குறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது.

அது சரி கட்சி பேரில் நன்கொடை வாங்குவதற்கான விதி என்ன?

அரசியல் கட்சிகளுக்கு நிறுவனச் சட்டம் 1956 -ன் படி, கட்சி நபர் ஒருவரால், அல்லது அரசு நிறுவனம் அல்லாத நிறுவனத்தால், மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைத் தொகையினைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு.

• அரசு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற முடியாது.

• அந்த நன்கொடையானது மனமுவந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும். வலுக்கட்டாயவசூல் கூடாது.அந்த நன்கொடையானது, The Company’s Act – 1956ன் காப்புரைகளுக்கு உட்பட்டுஇருக்க வேண்டும்.

நிறுவனம் என்றால் என்ன என The Company’s Act – 1956ல் வரையறை செய்யப்பட்டுள்ளபடி, என்றும்அரசு நிறுவனம் என்றால் நிறுவனச் சட்டம் – 1956ன் பிரிவு 617ல் குறிப்பிட்டபடியும்,நன்கொடை என்றால், அதே சட்டத்தின் பிரிவு 293 – A யின் கீழ் சொல்லப்பட்ட பொருளிலும், அதே சமயம், அரசியல் கட்சிக்கு ஏதேனும் நபரால் அளிக்கப்பட்ட ஏதேனும் நன்கொடைஅல்லது சந்தா தொகையினையும் உள்ளடக்கும்…என இந்தப் பதங்களுக்கான பொருளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் விளக்குகிறது.

பிரிவு 29B ல் குறிப்பிடப்பட்ட ”நபர்” ஒருவரால் எனும் பதத்தில் உள்ள நபர் எனும் சொல்லானது, வருமான வரிச்சட்டம் பிரிவு 2 (31)ன் கீழ் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பொருளைக்கொண்டிருக்கும். ஆனால், அரசு நிறுவனம் உள்ளாட்சி அமைப்பு மற்றும் அரசினால் நிதியுதவிமுழுமையாக அல்லது பகுதியாக அளிக்கப்படும் ஒவ்வொரு செயற்கையான சான்றாயர் ‘நபர்’ எனும் பதத்தினுள் அடங்காது.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 2 (31) ”நபர்” எனும் பதத்திற்குப் பொருள் விளக்கம் தருகிறது. அதன் படி,”person” includes-An individual,A Hindu undivided family,A company,A firmAn association of persons or a body of individuals, whether incorporated or not,A local authority, andEvery artificial juridical person, not falling within any of the preceding sub-clauses;ஆனால், அரசு நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, மற்றும் அரசினால் நிதியுதவி பகுதியாக அல்லதுமுழுதுமாகப் பெறும் செயற்கையான நபர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ‘நபர்’ எனும் வரையறையின் கீழ் வர மாட்டார். அதாவது, அரசு நிறுவனங்கள், மற்றும் மேற்கூறியவர்களிடமிருந்து, ஒரு அரசியல் கட்சியின் நபர் நன்கொடை வாங்குதல் கூடாது.அப்படி அரசியல கட்சிகளினால் வாங்கப்படும் மற்றும் வாங்கப்பட்ட நன்கொடையினை, அக்கட்சிகள், நிதியாண்டு அறிக்கையினை தயாரிக்க வேண்டும். அதாவது, அக்கட்சியின்பொருளாளர், அல்லது இதன் பொருட்டே அரசியல் கட்சியினால் ஏற்பளிக்கப்ப்ட்ட ஏதேனும் ஓர் நபர், ஒவ்வொரு நிதியாண்டிலும், அறிக்கை தயாரிக்க வேண்டும்.

அவையாவன: அந்தந்த நிதியாண்டில், நபர் எவரிடமிருந்தேனும், ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்டநன்கொடை,அரசு நிறுவனங்கள் அல்லாத, நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 20,000/க்கு மேல் பெறப்பட்ட நன்கொடை, ஆகிய தகவல்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் படிவத்தில் அமைந்திருக்க வேண்டும். வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 139ன் கீழ் அந்த நிதியாண்டிற்கான வருமான விவர அறிக்கைதாக்கல் செய்வதற்கான குறிப்பிட்ட தேதிக்கு முன், உட்பிரிவு (1) ந் கீழான நிதியாண்டுஅறிக்கையினை அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது இதன் பொருட்டு அரசியல் கட்சியினால் ஏற்பளிக்கப்பட்ட நபர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த அரசியல் கட்சியின் பொருளாளர் அல்லது அரசியல் கட்சியினால் இதன் பொருட்டு அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு நபரானவர்,

உட்பிரிவு (3) ந் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கத்தவறினால், வருமான வரிச் சட்டத்தில் எப்படி இருப்பினும், அந்த அரசியல் கட்சி அந்தச்சட்டத்தின் கீழ் வரி நிவாரணம் ஏதும் பெற உரிமை உடையது அன்று..