விஸ்வாசம் உள்ள அனைவருக்கும் அதிமுகவில் பதவிகள்! – நெல்லையில் எடப்பாடி பேச்சு!

விஸ்வாசம் உள்ள அனைவருக்கும் அதிமுகவில் பதவிகள்! – நெல்லையில் எடப்பாடி பேச்சு!

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கிய பொழுதும், பின்னர் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த அம்மாவுக்கும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எந்தளவிற்கு துன்பத்தைக் கொடுத்தார்களோ, அதே அளவிற்கு இப்பொழுது நமக்கும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க.வுக்கு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது, பதவிக்காக நேரத்துக்கு நேரம் மாறுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் வாகையடி முனை பகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா நேற்று மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர். இன்று அதிமுகவில் இணைந்தவர்கள் கட்சிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும். அவ்வாறு விஸ்வாசம் உள்ள அனைவருக்கும் அதிமுகவில் பதவிகள் தானாக தேடிவரும். அஇஅதிமுக கட்சி ஆலமரம் போன்றது, அனைவரையும் வரவேற்று இடம் கொடுக்கும் ஜனநாயக கட்சி அஇஅதிமுக மட்டுமே. திமுக போன்று மற்ற கட்சிகள் எல்லாம் வாரிசு அரசியலை கொண்டது. திமுக அந்த குடும்பத்திற்கு சொந்தமான கட்சி; அதிமுக ஒட்டுமொத்த மக்களின் கட்சி. என்றார்

மேலும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, “பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து இரட்டை இலையை பெற்ற பெருமை அம்மாவையே சாரும். இந்தியாவில் பிரிந்த இயக்கம் இதுவரை சேர்ந்த வரலாறு கிடையாது. அப்படிப்பட்ட வரலாற்றைப் படைத்த தலைவி அம்மா. அந்தக் காலக்கட்டத்தில் அம்மா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது, அம்மாவின் தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பை அப்பொழுது நான் பெற்றேன். அப்பொழுது அம்மா பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் முன்னிலையிலேயே, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல், பெண்மணி என்றும் பாராமல் அம்மாவை கொடுமையாக தாக்கினார்கள். சில அமைச்சர்கள் அம்மாவினுடைய சேலையை, முடியைப் பிடித்து இழுத்தார்கள். எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் சபதம் ஏற்றதைப் போல அம்மாவும் மீண்டும் சட்டமன்றத்தில் நுழைகின்ற பொழுது நான் தமிழகத்தின் முதலமைச்சராகத் தான் நுழைவேன் என்று சபதம் எடுத்து, அதேபோல் சட்டமன்றத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தி.மு.க.வுக்கு நல்லெண்ணம் கிடையாது

அம்மா, பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபொழுது அம்மாவின் கார் மீது லாரியை மோத வைத்து அம்மாவை கொலை செய்ய தி.மு.க.வை சேர்ந்தவர்கள் முயற்சித் தார்கள். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கிய பொழுதும், பின்னர் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த அம்மாவுக்கும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எந்தளவிற்கு துன்பத்தைக் கொடுத்தார் களோ, அதே அளவிற்கு இப்பொழுது நமக்கும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க.வினருக்கு எப்பொழுதுமே நல்லெண்ணம் கிடையாது. எனவே, மக்கள் அவர்களை தூக்கி எறிந்துவிட்டார்கள். அம்மா 6 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று சிறப்பான ஆட்சி தந்தவர்.

இன்றைக்கு ஸ்டாலின் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார். இவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாரா? அவருக்கு அதிகாரம் இருந்தபொழுது கிராமங்களுக்கு சென்றிருந்தால் மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொடுத்திருக்கலாம். இப்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவராகி மூன்றாண்டு கழித்துதான் கிராமம், கிராமமாக போய்க் கொண்டிருக் கிறார். நாடாளுமன்றத் தேர்தல் வருவதினால், அதில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி மந்திரியாக வேண்டும், அதிகாரத்திற்கு வரவேண்டும், அதற்காகத்தானே யொழிய, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற அக்கறையில் மக்களை பார்க்க கிராமத்திற்குப் போகவில்லை, நாடகம் நடிக்கின்றார்கள், மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல், மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள், மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள், 14 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரே கட்சி தமிழ்நாட்டில் தி.மு.க.தான். மாநிலக் கட்சிகள் தொடர்ந்து 14 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்த வரலாறு கிடையாது. தேசிய கட்சிகள்தான் இருக்கும். முதலில் பாரதீய ஜனதா கட்சியில் இருந்தபொழுது முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார், பேச்சு மூச்சே இல்லை, ஒரு வருடம் அமைச்சராக வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது மு.க.ஸ்டாலின் பாரதீய ஜனதா கட்சி தீண்டத் தகாத கட்சி என்கிறார். அதிகாரம் வரும்பொழுது அந்தக் கட்சி இனிக்கின்றது. பதவி வரும்பொழுது அந்தக் கட்சி நல்ல கட்சி. ஆனால், இப்பொழுது அந்தக் கட்சி கசக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எந்தத் திட்டம் கொண்டு வரவில்லை. அதிகாரத்தில் இருந்து குடும்பத்தை வளமாக்கிக் கொண்டார் கள். அதன்பிறகு பாரதீய ஜனதாவிற்கு சரிவு ஏற்பட்டவுடனே காங்கிரசில் சேர்ந்தார்கள். இவர் களுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் கூட்டணி மந்திரி சபையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தார்கள். அப்பொழுதும் தமிழ்நாட்டிற்கு ஏதும் செய்யவில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நாடகம் போடுவார்கள், பேசுவார்கள். ஏனென்றால், கண்ணிற்குத் தெரியாத காற்றிலேயே ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.க. தான்.

இப்பொழுது ஒரு பொய்யான குற்றசாட்டாக, கோடநாடு பிரச்சினை பற்றி சொல்கிறார். கொட நாட்டில் ஒரு கூலிப்படை ஒரு தனியார் குடும்பத்திற்குச் சொந்தம். அது யார் என்று நமக்கெல்லாம் தெரியும். அந்தக் குடும்பத்தினருக்கான அந்த இடத்திற்குச் சென்று கொள்ளையடிக்கச் சென்ற போது கூர்க்காவை கட்டிப் போட்டு செல்கிறார்கள், அவர் இறந்து விடுகிறார். அந்தக் கொள்ளைச் சம்பவத்தைக் கண்டுபிடித்தது அம்மாவினுடைய அரசு. அந்தக் கூலிப்படைக்க தலைவனாக இருக்கக்கூடிய சயான் என்பவன் எல்லா ஊடகத்திலும் அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்பொழுதே கனகராஜ் என்பவன் என்னை அழைத்தான் என்று சொல்லி, அப்பொழுதே சதித்திட்டம் தீட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா மறைவிற்குப் பிறகு நான்கு மாதங்கள் கழித்து அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொள்ளையடிக்கச் சென்றபொழுது கனகராஜ் என்பவன், அங்கே நிறைய ரிக்கார்டு இருக்கிறது, அவற்றை எடுத்துக் கொடுத்தால் எடப்பாடி பழனிசாமி பணம் தருவேன் என்று சொன்னார்’ என்று சொன்னதாக சயான் சொல்கிறார். கனகராஜ் இறந்துவிட்டான், அவன் பெயரை பயன்படுத்தி திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் கள். அதற்கு ஒரு வீடியோ தயார் செய்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கின்றார்கள்.

மனோஜ் என்பவன் மீது கேரளாவில் கொலைக் கேஸில், புதுக்காடு காவல் நிலையத்தில் குற்ற எண்.991/16, 301 இந்தியச் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவன் கொடுக்கின்ற ஸ்டேட்மெண்ட்டை வைத்து, இவன் நம்மை குற்றவாளி என்று சொல்கிறான். கொள்ளையடிக்க சென்றவர்களில் ஒருவனான தீபு என்பவன் மீது கடத்தல், ஏமாற்றுதல், திருட்டு போன்ற வழக்கு களில் மஞ்சேரி, தலச்சேரி, அரிகடே, காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜெம்சி என்பவர் மீது பாலியல், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பெண்களை மானபங்கப் படுத்தல், ஏமாற்றுதல், போதை பொருள் வைத்திருத்தல் என்று பல குற்ற வழக்குகளில், கேரளா வில் அரிகடே, பாலக்காடு போன்ற காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கள். இன்னொருவன் மீது கடத்தல், மிரட்டல் என்ற குற்றங்களில் மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுடனும், குற்றப் பின்னணி உடையவர்களுடனும், கொடு குற்றம் புரிந்துள்ளவர்களோடு இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. இதனுடைய பின்னணி யார் என்று பார்க்கின்றபொழுது, தி.மு.க. கட்சிக்காரன்தான் ஜாமீன் எடுக்கிறான்.

திமுக-வைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஏற்பாடு செய்து இன்றைக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைப்பதற்கான வழிவகையை செய்திருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சதி செய்கின்றார்கள். இதற்கெல்லாம் பின்புலம் தி.மு.க., அதற்கு ஸ்டாலின் குரல் கொடுக்கிறார். கேரளாவில் சயான், அவனுடைய மனைவி, மகளுடன் சொந்தக்காரர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருக்கும்பொழுது, நின்று கொண்டிருந்த கன்டெய்னர் மீது மோதி அவனுடைய மனைவி, மகள் இறந்து விடுகிறார்கள். அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். நம்முடைய அரசு தான் அவனை காப்பாற்றி இன்றைக்கு கொண்டு வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த விபத்தை கண்டு பிடித்ததும் அம்மாவினுடைய அரசு தான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும், இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும், சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே, திட்டமிட்டு, பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இருபெரும் தலைவர்களான டாக்டர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்கள்தான் குடும்பம், மக்கள் பிரச்சினைகளை தங்கள் பிரச்சினை களாகத்தான் பார்த்தார்கள். அந்த வழியில் வந்த அம்மாவின் அரசையும் இந்த மக்கள்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசுக்குத் துணை நிற்பவர்கள் மக்கள். அதேபோல், தொண்டன் ஆளுகின்ற ஒரே இயக்கம் அண்ணா தி.மு.க.

ஆகவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, புதிய, புதிய திட்டங்களை தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்காக, அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடித் தாருங்கள் என்று அன்போடு கேட்டு, தமிழகம் அனைத்து வகை யிலும் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அம்மாவினுடைய அரசு தொடர்ந்து பாடுபடும், பாடுபடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

error: Content is protected !!