2018-19 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு: நிதியமைச்சர் தாக்கல் செய்தார் – AanthaiReporter.Com

2018-19 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு: நிதியமைச்சர் தாக்கல் செய்தார்

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மக்களவையில் தாக்கல் செய்யப் போகும் நிலையில் நாடாளுமன்றத்தில் 2018-19 பொருளாதார ஆய்வை தாக்கல் செய்தார். இது கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 6.8% -மாக கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 2019-20-ஆம் ஆண்டில் 7%-மாக வளர்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தை பராமரிக்கும் என்றும் கணித்துள்ளது.

இந்திய அரசின் நீதித்துறை சீர்திருத்தங்களில் அரசின் செலவை சீராக்குவதும் முன்னுரிமை அடிப்படையில் செலவுகளை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமானவைகளாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்திக்கும் அதன் வரி விதிப்பு க்கும் இடையிலான விகிதம் மிக மிகக் குறைவானதாகும்.

முதலீட்டுக்கு தேவையான நிதியை அரசு வழங்குவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கும் அரசாங்கம் கடுமையான சவாலை எதிர் நோக்குகிறது. இந்த செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் பொழுது அரசின் நிதித் துறை தொடர்பான ஒழுக்க நெறிகளை, விதிகளை மீறாமல் இருப்பதும் மிக முக்கியமானதாகும்

அரசு செலவு விவரங்கள் இங்கே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளன. இதில் ராணுவத்துக்கான செலவு 12 சதவீதமாக உள்ளது.

சம்பளங்கள் அலவன்ஸ் ஆகியவைகளுக்கான செலவு 9 சதவீதம். அரசு வழங்கும் ஓய்வூதியர்களுக்கான செலவு 7 சதவீதம்.

அரசு பல்வேறு துறைகளுக்கு வழங்கும் மானியங்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றின் அளவு 12 சதவீதம் தான்.

ராணுவம் அல்லாத பிற முதலீட்டு செலவுகளுக்காக அரசு செலவிடுவது 9 சதவீதம் மட்டும்தான்.

மத்திய அரசு திட்டங்களுக்காக செலவிடும் தொகை 12 சதவீதம் மட்டும்தான். இதர செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை 15 சதவீதம்.

அரசு வாங்கிய வெளிநாட்டு கடன்களுக்காகவும் உள்நாட்டு கடன்களுக்காகவும் செலுத்தும் வட்டி 24% ஆகும் மத்திய அரசின் செலவுகளில் அது செலுத்தும் வட்டிதான் மிகப்பெரிய செலவினமாக உள்ளது.