சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு! – பிராவோ அறிவிப்பு!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு! – பிராவோ அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வெய்ன் பிராவோ. 35 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

வெய்ன் பிராவோ 2004-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தம் 270 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ivar  டெஸ்டில் 2,200 ரன்னும், 86 விக்கெட்டும் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் 2968 ரன்னும், 199 விக்கெட்டும், 20 ஓவரில் 1142 ரன்னும், 52 விக்கெட்டும் எடுத்தார்.

கடைசியாக சொந்த நாட்டு அணியில் 2016-ம் ஆண்டு விளையாடிய பிராவோ, 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.பல ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக மோதலில் இருந்த பிராவோ, ஐ.பி.எல். போன்ற டி20 தொடர்களில் விளையாடுவதையே விரும்பி வந்தார். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் உள்ளூர் அணிகள் சார்பில் அவர் களமிறங்கியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடக்கத்தில் விளையாடிய பிராவோ, அதன் பின்னர், பல சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தமிழக ரசிகர்களின் மனங்கவர்ந்த வீரராக மாறிப்போனார். அதிரடி கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல், மைதானத்தில் பிராவோ ஆடும் நடனம் வைரல் ஹிட். ‘உலா’ என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் பிராவோ நடித்துள்ளார்.

தன் ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதை கிரிக்கெட் உலகிற்கு உறுதிப்படுத்திக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக மெரூன் நிற ஜெர்சியை அணிந்து லார்ட்ஸ் மைதானத்திற்குள் நடந்து சென்ற அந்த நிமிடங்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன. அன்று கிடைத்த உற்சாகமும் தன்னம் பிக்கையும்தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது. இளம் தலைமுறைக்கு வழிவிட்டு தற்போது நான் எனது ஓய்வு முடிவை அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவேன் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!