ரத்தம் மற்றும் மனித உறுப்புகளுடன் பறந்து செல்லும் ட்ரோன்கள்! – அமெரிக்காவில் அறிமுகம்

ரத்தம் மற்றும் மனித உறுப்புகளுடன்  பறந்து செல்லும் ட்ரோன்கள்! – அமெரிக்காவில் அறிமுகம்

அவசர காலத்தில் ரத்தம் மற்றும் மனித உறுப்புகளை கொண்டு செல்ல அதிவேகத்தில் பறந்து செல்லும் ட்ரோன்கள் அமெரிக்காவில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ருவாண்டாவில் இத்தாய ட்ரோன் மூலம் ரத்தம் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நகரங்களில் பயணிப்பவர்கள் தினநோதோறும் எதிர்கொண்டு வருத்தப்படும் ஒரு விஷயம் ஆம்புலன்ஸ். கன்னாபின்னாவென்று கலைந்து வளைந்து நெளிந்து போகும் வாகன் நெரிசலில் சிக்கிக்கொள்ளும் ஆம்புலன்ஸூக்கு வழிவிட பெரும்பாலானோர் விரும்பதான் செய்கிறார்கள். ஆனால், அந்த நெரிசல் அத்தனை சீக்கிரம் வழியை ஏற்படுத்தி தருவதில்லை. செய்வதறியாமல் திகைக்கிறார்கள். சில வினாடிகள் அவருக்காக பிரார்த்தனை செய்துவிட்டு அலுவலகத்துக்கு விரைவதை தவிர வேறுவழியில்லை.

ஆனால், தொழில்நுட்பம் அப்படி இருக்காது. இது போன்ற பல சிக்கல்களை தீர்க்கவல்லது. பறந்து பறந்து படம் பிடிக்க அதிகம் பயன்பட்டு வந்த ட்ரோன் டெக்னாலஜியை, இந்தப் பிரச்னைக்கு தீர்வாக யோசித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.அதற்காக ட்ரோன் ஆம்புலன்ஸை கண்டுபிடித்திருக்கிறார் கள்.  விளைவு, பல உயிர்கள் இதனால் காப்பாற்றப்பட இருக்கின்றன.

நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ட்ரோன் ஆம்புலன்ஸ். இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் மருத்துவர் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த கட்டளைகளை மருத்துவ உதவியாளருக்கு கொடுக்கலாம்.

இது போன்ற ட்ரோன் ஆம்புலன்ஸ் இன்னும் புரோட்டோ ஸ்டேஜில் தான் இருக்கிறது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரலாம். ஆனால், அதற்கு முன் ட்ரோனை இன்னும் ஒரு நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துகிறார்கள் இங்கிலாந்து மருத்துவர்கள்.

இந்த ட்ரோன் ’குட்டி’ ஆம்புலன்ஸ் நோயாளியை சுமந்து செல்லாது. மாறாக தேவையான முதலுதவி மருந்துகளை விரைவாக தேவையான இடத்துக்கு கொண்டு செல்லும்.

இதயம் செயலிழந்த பிறகு 4-6 நிமிடங்கள் கழித்தே மூளை செயலிழக்கும். அதற்குள் அவர்கள் இதயத்தை மீண்டும் துடிக்க செய்துவிட்டால் உயிர் பிழைத்துவிடுவார்கள். சிவாஜி படத்தில் ரஜினி, ரகுவரனை இப்படித்தான் காப்பாற்றுவார். அதற்கு உதவும் கருவிதான் defibrillators. ஆனால், மாரடைப்பு நேர்ந்த 6 நிமிடத்துக்குள் அவர்கள் மருத்துவமனைக்கு வருவது சாத்தியமில்லை. அதற்கு இந்த ட்ரோன் பயன்படுகிறது.

இந்த ட்ரோன், மணிக்கு 100கி.மீ வேகத்தில் பறக்கும். அதாவது 12 சதுர கிலோமீட்டருக்குள் இருக்கும் இடத்துக்கு ஒரே நிமிடத்தில் சென்று சேர்ந்துவிடும். ஆபத்து நேரத்தில் சிட்டாய் பறக்கும் கோடம்பாக்கம் ஹீரோக்களுக்கு கூட இதைவிட சற்று அதிக நேரம் ஆகும் என்பது தான் ஹைலைட். இந்த டிரோனுக்கு டிரைவரும் தேவையில்லை என்பது அடுத்த ஸ்பெஷல் விஷயம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்லும் ட்ரோன் ஆம்புலன்ஸ்.

ஜிப்லைன் எனும் ஆளில்லா விமான போக்குவரத்து சேவை மூலம் மருத்துவ தேவைகளுக்கான இரண்டாம் தலைமுறை ட்ரோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சென்று மருத்துவ சேவைக்கு வழிவகுக்கும் வகையில் டுரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

20 கிலோ எடை கொண்ட டுரோன்களில் 1.75 கிலோ எடையிலான பொருட்களை எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!